ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய தோல்விக்கு டாஸ் எல்லாம் ஒரு காரணமா? - பாரத் அருணுக்கு கவாஸ்கர் பதிலடி

இந்திய தோல்விக்கு டாஸ் எல்லாம் ஒரு காரணமா? - பாரத் அருணுக்கு கவாஸ்கர் பதிலடி

இந்திய அணி தொடர் தோல்வி

இந்திய அணி தொடர் தோல்வி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  யுஏஇயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு களைப்பு பணிச்சுமையைக் காரணமாக கூறிய பவுலிங் பயிற்சியாளர் டாஸையும் கூடச் சேர்த்துக் கொண்டார், இதை கவாஸ்கர் கடுமையாக மறுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

  பாகிஸ்தான், நியூசிலாந்து பவுலிங்குக்கு எதிராக இந்திய பேட்டர்களிடம் விடையில்லை என்பதுதான் உண்மையே தவிர டாஸினால் போச்சு என்று சொல்வதெல்லாம் சும்மா என்கிறார் சுனில் கவாஸ்கர்.  டாஸ் வெல்லும் அணிகளுக்கு ஒரு நியாயமற்ற சாதகப் பலன்கள் இருக்கின்றன, அது இவ்வளவு பெரிய தொடரில் அப்படி இருக்கக் கூடாது என்றார் பாரத் அருண்.

  முதலில் பேட் செய்து இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி தழுவியது. நியூசிலாந்து கூட தன் ஒரே தோல்வியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்துதான் தோல்வி தழுவியது. ஆகவே பாரத் அருண் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கிறது என்றாலும் மற்ற காரணங்களில் இதுவும் ஒன்று என்று கூற முடியுமே தவிர முற்று முழுதாக டாஸ் மேல் பழி போடுவது சரியல்லா என்பதாகவே கவாஸ்கர் கருதுகிறார்.

  இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது: “டாஸா? இல்லவே இல்லை, பாகிஸ்தான், நியூசிலாந்து பந்து வீச்சுக்கு எதிராக இவர்களிடம் விடையில்லை. நம் பேட்டிங் வளம் பெற அவர்கள் விடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 200 ரன்களைக் குவித்த போது பனிப்பொழிவு ஒரு மேட்டரே இல்லை, காரணம் 30-40 ரன்கள் கூடுதலாக எடுக்கும்போது எதிரணி திண்றுவதைத்தான் பார்க்கிறோம்.

  பந்து ஈரமானால் கூட எதிரணி கூடுதல் ரன்களை எடுக்க முடிந்தாலும் 200 ரன்களை எந்த கண்டிஷனிலும் விரட்டுவது கடினமே. நம் நட்சத்திர வீரர்களை பாகிஸ்தான், நியூசிலாந்து பவுலர்கள் எழும்பவிடவில்லை என்பதே உண்மை. ஈரமான பந்தில் போடுவதற்கு ஏற்ப போதிய ஸ்கோர்களை இந்திய அணி எட்டவில்லை என்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

  பணிச்சுமை, பயோ பபுள் உண்மையில் சுமைதான், இல்லை என்று கூறவில்லை, ஏனெனில் பயோபபுள் அனுபவம் எனக்கு இல்லை, ஆனால் ஐபிஎல் தொடரில் கடைசி சில போட்டிகளில் இந்திய வீரர்கள் சிலர் ஆடாமல் இருந்திருக்கலாமே. சில போட்டிகளைத் தவிர்த்து டி20 உலகக்கோப்பைக்கு புத்துணர்வுடன் இருந்திருக்கலாமே. களைப்பாக இருக்கிறதா பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: T20 World Cup