• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • T20 World Cup 2021: இந்திய அணி மிகுந்த ஆபத்தானது - இன்சமாம் உல் ஹக்

T20 World Cup 2021: இந்திய அணி மிகுந்த ஆபத்தானது - இன்சமாம் உல் ஹக்

சச்சின் - இன்சமாம் | கோப்புப் படம்

சச்சின் - இன்சமாம் | கோப்புப் படம்

டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு, இப்போதுள்ள இந்திய அணி ஆபத்தான அணியாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்திய அணி உலகக்கோப்பைக்கு முன்பாக ஆடிய டி20 ஆட்டங்களில் இந்தியா அதிக போட்டிகளில் வென்றுள்ளது, பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை அனாயசமாக ஊதியுள்ளது. மேலும் அணியில் பந்து வீச்சு, பேட்டிங், ஸ்பின் பவுலிங், வேகப்பந்து வீச்சு இரண்டும் அபூர்வமாகக் கலவை கொண்டு இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு பெஞ்ச் ஸ்ட்ரெந்த்துடன் வலுவான அணியாக திகழ்வதோடு அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது.

  ஆனால் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அந்த நாளில் எதிரணியினரின் ஒரிருவருக்கு ஆட்டம் பிடித்து விட்டால் அந்த அணி வெற்றி பெறும் ஆகவே ஏற்கெனவே இருக்கும் பார்ம், பெரிய அளவில் வெற்றியை உறுதி செய்யாது. உதாரணமாக ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை, ஆனால் இதில் பின்னி எடுக்கலாம், அதே போல் ரோகித் சர்மா பிரதான ஆட்டங்களில் சொதப்பவும் செய்யலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கிருந்தோ வந்து தென் ஆப்பிரிக்காவோ, பாகிஸ்தானோ கோப்பையைத் தட்டிச் செல்ல கூட வாய்ப்புள்ளது.

  இந்நிலையில் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது: “என்னைப் பொறுத்தவரை, இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது சூழல் அதற்குச் சாதகமாக இருக்கிறது. இந்திய அணியில் இருப்போர் அனைவரும் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடியஅனுபவம் உடையவர்கள். விராட் கோலி பேட் செய்யாமலே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 153 ரன்களை சேஸிங் செய்யும்போது,இப்போதுள்ள சூழலில் இந்திய அணி மிகுந்த ஆபத்தான அணி என்பதை நிரூபித்துவிட்டார்கள்.

  பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை ஊதித்தள்ளினர். இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்குஇடையிலான சூப்பர் 12 போட்டிதான் இறுதிப் போட்டிக்கு முன் களமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். எந்த ஆட்டமும் இதுபோன்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில்லை. கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கூட இந்த அளவுக்கு இல்லை. இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மோதி்க்கொண்டால், தொடக்கம் முதல்,முடிவு வரை இறுதிப்போட்டி போன்றே இருக்கும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, கிடைக்கும் மனவெழுச்சி பெரிதாக அமையும், 50 சதவீத மன அழுத்தம் நீங்கிவிடும்” என்றார் இன்சமாம் உல் ஹக்.

  Also Read: T20 World Cup 2021 India vs Pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய லெவன் என்ன? அஸ்வின் இல்லை?

  பாகிஸ்தான் அணி: பாபர் அசாம், ஷதாப் கான், அசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவ்ஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சர்பராஸ் அகமெட், ஷாகின் அப்ரீடி, ஷோயப் மாலிக், ஷோயப் மக்சூது

  இந்திய அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், அஸ்வின், பும்ரா, ராகுல் சாகர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி

  Also Read: ஐபிஎல் மூலம் பிசிசிஐக்கு இத்தனைப் பணமா? - கூரையைப் பிச்சிட்டு கொட்டப்போகுது

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: