• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை வெளியேற்றியது இலங்கை- ஹசரங்கா சாதனை

டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை வெளியேற்றியது இலங்கை- ஹசரங்கா சாதனை

டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்வை வெளியேற்றிய இலங்கை

டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்வை வெளியேற்றிய இலங்கை

இந்திய அணியை விட இந்த உலகக்கோப்பையில் இலங்கை நன்றாக ஆடுகிறது என்றுதான் கூற வேண்டும். நல்ல பவுலிங், நல்ல பீல்டிங்.

  • Share this:
அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணி 189 ரன்களைக் குவித்த பிறகு மே.இ.தீவுகள் அணியை 169/8 என்று முடக்கி வெற்றி பெற்றது, இதன் மூலம் அரையிறுதி இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டியை ஏற்படுத்தி விட்டது.

இப்போதைய நிலையில் பிரிவு ஏ-யில் இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் நம்பர் 1 ஆக அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா அணி நேற்று வங்கதேசத்தை பெரிய வெற்றி பெற்றதன் மூலம் 1.031 என்ற ரன் ரேட்டுடன் 2ம் இடத்தில் 6 புள்ளிகளுடன் வீற்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவும் 4 ஆட்டங்களில் 6 புள்ளிகள் பெற்று 0.742 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

இலங்கை அணியில் பதும் நிசாங்கா 41 பந்துகளில் 51 ரன்கள் விளாச, சரித் அசலங்கா தொடர்ந்து பிரமாதமான பார்மில் 48 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுகாக 61 பந்துகளில் 91 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 189/3 என்ற இலக்கை எட்டியது.



தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகலஸ் பூரான் 34 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 46 எடுக்க, ஷிம்ரன் ஹெட்மையர் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் ஆனால் வெஸ்ட் இண்டீஸ் 169/8 என்று தோல்வி அடைந்து வெளியேறியது. ஹசரங்கா மீண்டும் சிறப்பாக வீசி 4 ஓவர் 19 ரன்2 விக்கெட்.



16 விக்கெட்டுகளுடன் ஹசரங்கா உலகக்கோப்பை சாதனை புரிந்துள்ளார். இந்தத் தொடரில் சரித் அசலங்கா வரும்போது லெவனிலேயே இல்லை. பிறகு தினேஷ் சந்திமாலுக்குப் பதில் 3ம் நிலையில் இறக்கப்பட்டார். முதல் 2 போட்டிகளில் அவர் சொதப்பினாலும் அதன் பிறகு அவரது ஸ்கோர் 8, 80*, 35, 21, 12, 68 என்று அசத்தலாக உள்ளது, இந்திய அணியை விட இந்த உலகக்கோப்பையில் இலங்கை நன்றாக ஆடுகிறது என்றுதான் கூற வேண்டும். நல்ல பவுலிங், நல்ல பீல்டிங்.

நிசாங்கா, அசலங்கா 91 ரன்கள் சேர்த்தாலும் கடைசி நேர அதிரடி ஷனகா மூலம் நிறைவேறியது. அவர் 2 பவுண்டரி 1 சிக்ஸ் மூலம் 14 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். இலங்கை கடைசி 4 ஓவர்களில் 52 ரன்கள் விளாசியது.



வெஸ்ட் இண்டீஸ் கொலாப்ஸ்: ஏகப்பட்ட போட்டிகளில் மேட்ச் வின்னராக இருதிருக்கும் கிறிஸ் கெய்ல் கதை முடிந்தது, அவ்வளவுதான், நேற்று முதல் 4 பந்துகளில் ஒரு சிங்கிள் எடுத்தார். முதல் ஆக்ரோஷ அடியிலேயே மிட் ஆஃபில் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். எவின் லூயிஸ், ராஸ்டன் சேஸ் ஆகியோரும் பவர் ப்ளேவுக்குள் காலியாகினர்.

பூரான் 46 ரன்களை எடுத்து 12வது ஓவரில் ஆட்டமிழந்த போது ரன் ரேட் வெற்றிக்கு 12 ரன்களுக்கும் மேல் தேவை என்று எகிறியது. பூரான் அவுட் ஆகும் போது 15 பந்தில் 9 ரன்கள் என்று இருந்த ஹெட்மையர் அதிரடியில் இறங்கினாலும் மறு முனையில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சரிந்தன. யாராவது இன்னொரு வீரர் கெய்லோ அல்லது எவின் லூயிஸோ 30 ரன்கள் எடுத்திருந்தால் போதும் 20 ரன்கள் எடுத்திருந்தால் போதும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: