• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • போயும் போயும் ஷூவில் ஊற்றியா குடிப்பார்கள்: ஷோயப் அக்தர் அருவருப்பு

போயும் போயும் ஷூவில் ஊற்றியா குடிப்பார்கள்: ஷோயப் அக்தர் அருவருப்பு

வெற்றிக் களிப்பில் ஆஸி. வீரர்கள்.

வெற்றிக் களிப்பில் ஆஸி. வீரர்கள்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற பிறகு வெற்றிப்பித்து தலைக்கேற தங்கள் ஷூ-வில் பானத்தை ஊற்றி குடித்தார்கள். இது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இந்தச் செயலை ‘அருவருக்கத் தக்க செயல்’ என்று கண்டித்துள்ளார்.

    முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்துள்ளனர்.
    ஷூவில் குளிர் பானம் ஊற்றிக் குடித்த இந்த வீடியோ மற்றும் படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலானது. ஷூவில் பானம் ஊற்றி அருந்திய வீடியோவை ஐசிசியே வெளியிட்டு மகிழ்ந்தது.

    ஆஸ்திரேலிய வீரர்களிடம் சிலபல அருவருப்பான செயல்களை களத்தில் பார்க்கலாம் தங்கள் கைகளிலேயே எச்சிலைத் துப்பி தேய்த்துக் கொள்வார்கள் இது எப்படி என்று இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அருவருப்பாகவே இருக்கும். அதே போல்தான் ஷூவில் போய் ஊற்றியா குடிப்பார்கள் என்று அருவருப்பான ஒரு செயலைத்தான் அவர்கள் செய்தனர், ஷோயப் அக்தர் ஒரு மேட்டுக்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, நேரடியாகவே அருவருப்பாக உள்ளது என்று தன் ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by ICC (@icc)






    “அருவருக்கத்தக்க கொண்டாட்டம்...இல்லையா?’ என்று அவர் கூறியுள்ளார். நாக்-அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை எப்போதும் ஆஸ்திரேலியா அணி பந்தாடுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. உண்மையைக் கூற வேண்டுமெனில் கடந்த 40 ஆண்டுகளாக நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியதேயில்லை என்பது கடும் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்த உலகக்கோப்பை டி20 தொடருடன் சேர்த்து. இந்த ஆண்டு 627 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் 2021-ல் முகமது ரிஸ்வானுக்கு (1033) அடுத்த படியாக டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்துள்ளார். பாபர் ஆசம் 826 ரன்கள்.

    60 ரன்களை 4 ஓவர்களில் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா அணியில் அதிசாத்து வாங்கிய பவுலராக 2வது இடம் பெற்றார். 2018-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஆண்ட்ரூ டை 64 ரன்களை கொடுத்ததே சாத்துமுறையில் முதலிடம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: