Home /News /sports /

T20 Worldcup| சர்வதேச டி20-யில் இனி சிறந்த பவுலர் ஷாகிப் அல் ஹசன் - மலிங்காவை கடந்தார்

T20 Worldcup| சர்வதேச டி20-யில் இனி சிறந்த பவுலர் ஷாகிப் அல் ஹசன் - மலிங்காவை கடந்தார்

ஷாகிப் அல் ஹசன்

ஷாகிப் அல் ஹசன்

லசித் மலிங்காவைக் கடந்து சென்ற வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெற்று வருகின்றன, இதில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் மைக்கேல் லீஸ்க் விக்கெட்டை கைப்பற்றிய போது 108 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். இலங்கை அணியின் லசித் மலிங்கா 107 சர்வதேச டி20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    ஷாகிப் அல் ஹசன் நேற்று 4 ஓவர் 17 ரன்கள் 2 விக்கெட்டுகள் என்று அசத்தினார், பேட்டிங்கில் 20 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது ஸ்காட்லாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீவ்ஸ் வீசிய அரைக்குழி பந்தை கொடியேற்றி பவுண்டரியில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    இந்நிலையில் தன் ஐபிஎல் அனுபவம் டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு கைகொடுக்கும் என்று கூறினார் ஷாகிப் அல் ஹசன். “இந்த ஐபிஎல் நிச்சயம் உலகக்கோப்பை அணி வீரர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். நானும் முஸ்தபிசுர் ரஹ்மானு எங்கள் ஐபிஎல் யுஏஇ அனுபவத்தை பார்வைகளை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்வோம். மற்ற வீரர்களின் மனநிலையை புரிந்து கொள்வோம்.

    உலகக்கோப்பை பற்றி மற்ற வீரர்களிடம் பேசிப்பெற்ற கருத்துச் செல்வங்களை எங்கள் அணி வீரர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இந்த சூழ்நிலைமைகளுக்கு தகவமைத்துக் கொள்ளுதல் கடினமல்ல. ஓமானுக்கு 15-16 நாட்கள் முன்னமேயே வந்ததால் எங்கள் அணிக்குச் சாதகங்கள் நிறைய உள்ளன. இங்கும், அங்கும் பிட்ச்களில் பெரிய மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை” என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.

    Also Read: மனதுக்குள் சிரிப்பு? அஸ்வின் திறமை பற்றி திடீர் ஞானோதயம் பெற்ற கோலி

    ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை குழிப்பிட்ச்களைப் போட்டு வீழ்த்தி நாகின் டான்ஸ் ஆடி கொக்கரித்த வங்கதேச அணி நேற்று தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, ஷாகிப் அல் ஹசன் பாவம் அதற்கு முன் இண்டெர்வியூவில் கூறும்போது, ‘எங்கள் அணி வின்னிங் ஹேபிட்டை வளர்த்துக் கொண்டுள்ளது’ என்றார் ஸ்காட்லாந்திடம் தோற்கும் அளவுக்கு வின்னிங் ஹேபிட் வளர்ந்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Lasith Malinga, Shakib al hasan, T20 World Cup

    அடுத்த செய்தி