ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அரையிறுதியில் நியூசிலாந்தை இங்கிலாந்து கடித்துத் துப்பிவிடும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு

அரையிறுதியில் நியூசிலாந்தை இங்கிலாந்து கடித்துத் துப்பிவிடும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் மிகவும் சுவாரஸியமான 2 போட்டிகளில் ஒன்று இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியாகும். ஏனெனில் 2019 உலகக்கோப்பையில் அநியாயமாக இங்கிலாந்திடம் கோப்பை அளிக்கப்பட்டது என்றே நியூசிலாந்தும் உலகில் உள்ள கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்களும் கருதுகின்றனர், இந்நிலையில் நியூசிலாந்தை அரையிறுதியில் இங்கிலாந்து கடித்துத் துப்பி விடும் என்று நம்மூர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

  2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டி முதலில் ஸ்கோர்கள் அளவில் டை ஆகி, பிறகு சூப்பர் ஓவரும் இருதரப்பும் டை ஆக கடைசியில் கோப்பையை பகிர்ந்தளிக்காமல் அதிக பவுண்டரிகளை வைத்து மொன்னையான ஒரு தீர்ப்பில் நியூசிலாந்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே பலரும் அப்போது கருதினர், நியூசிலாந்தின் இருதயம் நொறுங்கியது.

  இதனையடுத்த யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி தழுவிய போது ஏம்ப்பா பெனால்டி கிக் கொடுக்க வேண்டும் அதிக பாஸ்கள் செய்தது இங்கிலாந்து என்று இங்கிலாந்திடம் கோப்பையைக் கொடுக்க வேண்டியதுதானே என்று நியூசிலாந்தின் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் நீஷம் கிண்டலடித்தார். யூரோ 2020 கால்பந்தில் 1-1 என்று முழுநேரத்தில் ட்ரா ஆக பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலி 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் இருதயம் நொறுங்கியது.

  இந்நிலையில் 2019 உலகக்கோப்பையில் கோப்பை பறிபோனதற்கு பழிவாங்கும் முகமாக இயற்கையாகவே இங்கிலாந்து-நியூசிலாந்து அரையிறுதி டி20 உலகக்கோப்பையில் அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்துதான் வெல்லும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா, அவர் யூடியூப் சேனலில் கூறியதாவது:

  “நியூசிலாந்து அணி என்பது 5 விரல்கள் சேர்ந்த முஷ்டி அவ்வளவுதான், கன் டீமெல்லாம் அல்ல. உள்ளபடியே கூறுகிறேன், நியூசிலாந்து பேட்டிங் வலுவானது அல்ல. இப்போது அரையிறுதியில் நியூசிலாந்து நுழைந்து இங்கிலாந்தை எதிர்கொள்கிறதென்றால் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை நன்றாக மென்று, கடித்துத் துப்பி விடும். இங்கிலாந்து அவர்களை சும்மா விடமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து அணி கட்டுக்கோப்பான அணி என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்”, என்றார் ஆகாஷ் சோப்ரா.

  பொறுத்திருந்து பார்ப்போம் யார் யாரை கடித்துத் துப்புகிறார்கள் என்று. இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் ஆட மாட்டார். பட்லர், பேர்ஸ்டோ தொடக்க வீரர்கள், மற்றபடி அனைவரும் பார்மில் இருக்கின்றனர். நியூசிலாந்து முதலில் பேட் செய்து 160 ரன்களை எடுத்தால் இங்கிலாந்தை சாண்ட்னர், இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட்டை வைத்து என்ன சேதி என்று கேட்க முடியும். ஆனால் இங்கிலாந்து அணி செம பார்மில் உள்ளது, கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்ட பவுலர்கள் செம்மயாக வீசுகின்றனர், கடைசி வரை பேட்டிங் உள்ள அணியாக இருக்கிறது இங்கிலாந்து.

  Published by:Muthukumar
  First published:

  Tags: T20 World Cup