ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 World Cup 2021, Semi-Final: ஆட்டத்தை மாற்றிய அந்த ஒரு ஓவர்: நீஷம் ஆக்‘ரோஷம்’-சோக்கர்ஸ் ஆன இங்கிலாந்து

T20 World Cup 2021, Semi-Final: ஆட்டத்தை மாற்றிய அந்த ஒரு ஓவர்: நீஷம் ஆக்‘ரோஷம்’-சோக்கர்ஸ் ஆன இங்கிலாந்து

நியூசி வெற்றியைத் தீர்மானித்த ஒரு ஓவர்.

நியூசி வெற்றியைத் தீர்மானித்த ஒரு ஓவர்.

18வது ஓவரை ஆதில் ரஷீத் வீச மிட்விக்கெட்டில் பெரிய சிக்சரை அடித்தார் நீஷம். பிறகு ரஷீத் பெரிய ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை வீச மிட்விக்கெட்டில் சிக்ஸ் ஆனது.ஆனால் இதே ஓவரில் நீஷம் 27 ரன்களில் மோர்கனிடம் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச வந்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அபுதாபியில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி வெற்றி வாய்ப்பே இல்லாத கடினமான இடத்திலிருந்து மீண்டு அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது. காரணம் டேரில் மிட்செல் (72), கான்வே (46), நீஷம் (27) ஆகியோரது ஆட்டமே.

  இங்கிலாந்து முதலில் மொயின் அலியின் கடைசி கட்ட அதிரடியில் 166 ரன்களைக் குவிக்க தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் கப்தில், வில்லியம்சன் விக்கெட்டுகளை கிறிஸ் வோக்ஸிடம் இழந்து பரிதவித்தது, பிறகு டேரில் மிட்செல், டெவன் கான்வே கூட்டணி 11 ஓவர்களில் 82 ரன்கள் கூட்டணியை மிகப் பிரமாதமாக கட்டமைத்தனர். பிறகு ஜேம்ஸ் நீஷம் இறங்கி சற்றும் எதிர்பாரா விதமாக 11 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 27 ரன்களை விளாசியதிலும் டேரில் மிட்செல் 47 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 72 நாட் அவுட் எனவும் முடிய நியூசிலாந்து அணீ 19 ஓவர்களில் 167/5 என்று அபார வெற்றி பெற்றது.

  ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் கிடுக்கிப் பிடி பந்துவீச்சில் நியூசிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 57 ரன்கள் தேவைப் பட்டது. அதாவது ஓவருக்கு 14 ரன்களுக்கும் மேல் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 2019 உலகக்கோப்பையில் டை ஆன போது கிரீசில் இருந்தவர் ஜேம்ஸ் நீஷம், எனவே அவருக்கு வலி அதிகம், இந்த முறை விடக்கூடாது என்று பேய் போல் ஆடினார். கிறிஸ் ஜோர்டான் வந்தார் 17வது ஓவரின் முதல் பந்தை நீஷம் பெரிய சிக்ஸ் அடித்தார், பந்து காணாமல் போனது. பிறகு ஆஃப் ஸ்டம்ப் பந்தை லாங் ஆனில் ஒரு பவுண்டரி அடித்தார், ஜோர்டன் பதற்றத்தில் 2 வைடுகளை வீசினார்.

  4வது பந்தை மீண்டும் நீஷம் தூக்கி லாங் ஆனில் அடிக்க சிக்ஸ் போன பந்தை பேர்ஸ்டோ கேட்சை எடுத்தார், ஆனால் பேலன்ஸ் தவறி சிக்ஸ் ஆகிவிடுமோ என்று பந்தைத் தள்ளினார். ஆனால் அவர் பந்துடன் தொடர்பில் இருந்த போது முழங்கால் பவுண்டரி கயிறில் பட்டது தெரியவர சிக்ஸ். இந்த ஓவரில் 23 ரன்கள் வர திருப்பு முனையானது, இந்த ஓவர்தான் ஆட்டத்தை நியூசிலாந்து பக்கம் திருப்பியது. 18 பந்துகளில் 34 ரன்கள் என்றாலும் கடினமே.

  18வது ஓவரை ஆதில் ரஷீத் வீச மிட்விக்கெட்டில் பெரிய சிக்சரை அடித்தார் நீஷம். பிறகு ரஷீத் பெரிய ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை வீச மிட்விக்கெட்டில் சிக்ஸ் ஆனது.ஆனால் இதே ஓவரில் நீஷம் 27 ரன்களில் மோர்கனிடம் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச வந்தார்.

  ஆனால் சிக்ஸர் ஹிட்டிங் உள்நாட்டில் புகழ்பெற்ற டேரில் மிட்செல் இப்போது தன் வீரத்தைக் காட்டினார் வோக்ஸை 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசி 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்தார், நம்ப முடியாத வெற்றியாகும் இது. கிரிக்கெட் ஆட்டத்தின் தரம் அதன் உச்சத்தில் இருந்தது. டேரில் மிட்செல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ் ஜோர்டானுக்கு கொடுத்த அந்த ஓவரை மொயின் அலிக்குக் கொடுத்துப் பார்த்திருக்கலாம், ஆனால் நேற்று ஏனோ மொயின் அலிக்கு பவுலிங்கே கொடுக்கவில்லை. பதிலாக லிவிங்ஸ்டன் பார்ட் டைம் ஆஃப் ஸ்பின் 4 ஓவர் 22 ரன்கள் என்று இங்கிலாந்துக்கு கைகொடுத்தது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Kane Williamson, T20 World Cup