• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021:வங்கதேச அணியைப் பார்சல் செய்த அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர் கிறிஸ் கிரீவ்ஸ்

T20 World Cup 2021:வங்கதேச அணியைப் பார்சல் செய்த அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர் கிறிஸ் கிரீவ்ஸ்

ஸ்காட்லாந்தின் ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீவ்ஸ், அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர்.

ஸ்காட்லாந்தின் ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீவ்ஸ், அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர்.

வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் நிறுவனத்தில் பார்சல் டெலிவரி டிரைவராகப் பணியாற்றியவர். நேற்று ஹீரோ, ஆட்ட நாயகன் கிறிஸ் கிரேவ்ஸ். 

  • Share this:
    ஓமான், அல் அமீரட்டில் நடந்த நேற்றைய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று பி பிரிவு போட்டியில் வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்து ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது, இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் நிறுவனத்தில் பார்சல் டெலிவரி டிரைவராகப் பணியாற்றியவர். நேற்று ஹீரோ, ஆட்ட நாயகன் கிறிஸ் கிரீவ்ஸ்.

    முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 53/6 என்று தடுமாறியது, மெகதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் கலக்க இறங்கினார் கிறிஸ் கிரேவ்ஸ் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்ததோடு, மார்க் வாட் (22) என்ற வீரருடன் சேர்ந்து 51 ரன்களை 7வது விக்கெட்டுக்காகக் கூட்டணி அமைத்தார்.

    இதனையடுத்து பிரமாதமான 140 ரன்களை ஸ்காட்லாந்து எட்டியது.
    பிறகு வங்கதேசம் பேட் செய்த போது 18/2 என்ற நிலையிலிருந்து ஷகிப் அல் ஹசன் (20), முஷ்பிகுர் ரகீம் (38) ஸ்கோரை 65 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது  வீச வந்த கிறிஸ் கிரேவ்ஸ் தன் லெக் பிரேக் பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் சாய்க்க வங்கதேசம் 134/7 என்று முடிந்தது. தோல்வி தழுவியது.

    உள்நாட்டில் குழிப்பிட்சை போட்டு அனைவரையும் தோற்கடிக்கும் நாகின் டான்ஸ் அணி வெளியில் வந்தால் பல்லிளிப்பது முதல் முறையல்ல. ஆனால் ஸ்காட்லாந்திடம் பார்சல் ஆனது அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர் கிறிஸ் கிரீவ்ஸினால் என்பதுதான் சுவாரஸ்யம்.

    இவர் பற்றி ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொயட்சர் கூறும்போது, சிறிது நாட்கள் முன்வரை அமேசான் நிறுவன பார்சல் டெலிவரி வாகன ஓட்டுநர், உலகக்கோப்பைக்காக தயாரிப்பில் ஈடுபட்ட போது 2 மாதங்களுக்கு முன்னால் கிறிஸ் கிரீவ்ஸ் முழு ஆர்வத்துடன் கிரிக்கெட்டில் செயல்பட்டார்.

    Also Read: டி20 உலகக் கோப்பைத் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து- நியூ கினியாவை வீழ்த்திய ஓமன்

    கிறிஸ் கிரீவ்ஸ் குறித்து பெருமையடைகிறேன். அவர் உண்மையில் நிறைய தியாகம் செய்துள்ளார். அமேசான் டெலிவரி டிரைவரிலிருந்து இன்று ஆட்ட நாயகன் என்றால் சும்மா அல்ல. இதை நான் கூறுவதை அவர் பாராட்டுவார் என்று நான் உறுதியாக நம்பவில்லை. கிரீவ்ஸ் ஒப்பந்த வீரர் அல்ல. மிகவும் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்தார்.

    ஒரு மாதத்திற்கு முன்னால் கூட அவர் போட்டிகள் எதிலும் ஆடவில்லை. அசோசியேட் அணிகளில் தரமான வீரர்கள் இருப்பதை இதுவே அறிவுறுத்துகிறது. அவர்களுக்கு தளம் தேவை வாய்ப்பு கிடைத்தால் நிரூபிப்பார்கள்.” என்றார் கொயெட்சர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: