• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பை - எந்தெந்த அணிகள் மோதல்: முழு அட்டவணை

டி20 உலகக் கோப்பை - எந்தெந்த அணிகள் மோதல்: முழு அட்டவணை

டி20 உலகக் கோப்பை 2021

டி20 உலகக் கோப்பை 2021

ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் அவற்றை நடத்தவுள்ளது பிசிசிஐ தான். முன்பே சொன்ன மாதிரி இந்த ஆட்டங்கள் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டன.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக  இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இது தொடர்பாக  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியது. இதையடுத்து போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (United Arab emirates) மாற்றப்பட்டன.   அதன்படி, அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்  நடைபெறவுள்ளது.

    இந்த ஆண்டு டி 20 போட்டியில் அனைத்து ஆரம்ப சுற்று போட்டிகளும் ஓமன் நகரில் நடைபெறும்.  ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதற்கான அமைத்து ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிக்கப்பட்டுவிட்டன. கடந்த 2020ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி கொரோனா காரணமாக  ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.  ஐக்கிய அரபு அமீரகத்தில்  போட்டிகள் நடைபெறுவதால்  கொரோனா மூன்றாவது அலையால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என நம்பப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை 2021  அணிகள்:

    கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.  இந்த முறை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவில்லை.  இந்த முறை இலங்கையும் பங்களாதேஷ் அணியும் குழு நிலையில்  இடம் பெறும்.  எனினும், டி20 உலகக் கோப்பை 2021ல் பங்கேற்கும் அணிகளின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. விரைவில்  அவை அறிவிக்கப்படவுள்ளன.

    பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து,ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன்,  பப்புவா நியூ கினியா ஆகிய  அணிகள் தொடக்க ஆட்டத்தில் தங்களின் பலத்தை  வெளிப்படுத்த உள்ளன.

    டி20 உலகக் கோப்பையை நடத்துபவர்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் அவற்றை நடத்தவுள்ளது பிசிசிஐ தான். முன்பே சொன்ன மாதிரி இந்த ஆட்டங்கள் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டன. பிசிசிஐ போட்டி நடத்துபவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதற்கு எந்த அணிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பை 2021 அட்டவணை

    தற்போது, டி20 உலகக்கோப்பை 2021க்கான அட்டவணை வெளியிடப்படவில்லை. விரைவில் இது தொடர்பான தகவல்களை போட்டி அமைப்பாளர்கள் அறிவிக்கவுள்ளனர். அட்டவணை தொடர்பான தகவல்களை கீழே பிடிஎஃப் (PDF) வடிவில் முழுமையாக வழங்குகிறோம். இதில், போட்டி நடைபெறும் நாள், பங்கேற்கும் அணிகள், அவை இடம்பெற்றுள்ள குழு போன்றவற்றை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

    டி20 உலகக் கோப்பை 2021  போட்டி அட்டவணை (T20 World Cup 2021 Schedule) :










































































































































































































































































































































    Match No Date Vs Rounds Group
    1 17-10-21 Sri Lanka vs Ireland 1st Group A
    2 18-10-21 Papua New Guinea vs Oman 1st Group A
    3 19-10-21 Bangladesh vs Namibia 1st Group B
    4 19-10-21 Netherlands vs Scotland 1st Group B
    5 20-10-21 Ireland vs Oman 1st Group A
    6 20-10-21 Sri Lanka vs Papua New Guinea 1st Group A
    7 21-10-21 Namibia vs Scotland 1st Group B
    8 21-10-21 Bangladesh vs Netherlands 1st Group B
    9 22-10-21 Papua New Guinea vs Ireland 1st Group A
    10 22-10-21 Sri Lanka vs Oman 1st Group A
    11 23-10-21 Netherlands vs Namibia 1st Group B
    12 23-10-21 Bangladesh vs Scotland 1st Group B
    13 24-10-21 Australia vs Pakistan Super 12 Group 1
    14 24-10-21 India vs South Africa Super 12 Group 2
    15 25-10-21 TBC vs TBC Super 12 Group 1
    16 25-10-21 New Zealand vs West Indies Super 12 Group 1
    17 26-10-21 Afghanistan vs TBC Super 12 Group 2
    18 26-10-21 England vs TBC Super 12 Group 2
    19 27-10-21 New Zealand vs TBC Super 12 Group 1
    20 28-10-21 Afghanistan vs TBC Super 12 Group 2
    21 28-10-21 Australia vs West Indies Super 12 Group 1
    22 29-10-21 Pakistan vs TBC Super 12 Group 1
    23 29-10-21 India vs TBC Super 12 Group 2
    24 30-10-21 England vs South Africa Super 12 Group 2
    25 30-10-21 West Indies vs TBC Super 12 Group 1
    26 31-10-21 New Zealand vs Pakistan Super 12 Group 1
    27 31-10-21 Australia vs TBC Super 12 Group 1
    28 01-11-21 Afghanistan vs South Africa Super 12 Group 2
    29 01-11-21 India vs England Super 12 Group 2
    30 02-11-21 TBC vs TBC Super 12 Group 2
    31 02-11-21 New Zealand vs TBC Super 12 Group 1
    32 03-11-21 Pakistan vs West Indies Super 12 Group 1
    33 04-11-21 Australia vs TBC Super 12 Group 1
    34 04-11-21 Afghanistan vs England Super 12 Group 2
    35 05-11-21 South Africa vs TBC Super 12 Group 2
    36 05-11-21 India vs TBC Super 12 Group 2
    37 06-11-21 Pakistan vs TBC Super 12 Group 1
    38 06-11-21 Australia vs New Zealand Super 12 Group 1
    39 07-11-21 England vs TBC Super 12 Group 2
    40 07-11-21 West Indies vs TBC Super 12 Group 1
    41 08-11-21 South Africa vs TBC Super 12 Group 2
    42 08-11-21 India vs Afghanistan Super 12 Group 2
    Date Team Match Name
    11 Nov 2021 TBC vs TBC 1st Semi-Final
    12 Nov 2021 TBC vs TBC 2nd Semi-Final
    14 Nov 2021 TBC vs TBC Final

    ஐக்கிய அரபு அமீரகத்தின் 4 மைதானங்களில் நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம், ஷார்ஜா ஸ்டேடியம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம் ஆகியவையே அவை.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: