ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்காட்லாந்து வெற்றிக்கு பின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் நிலை என்ன?

ஸ்காட்லாந்து வெற்றிக்கு பின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் நிலை என்ன?

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் புள்ளிப்பட்டியலில் இந்திய அதிவேகமாக முன்னேறி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இரண்டாவது அணி எது என்பதில் நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளது.

  நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் வெற்றியை பொறுத்தே அரையிறுதிக்கு முன்னேறும் அணி தெரியவரும். நியூசிலாந்து இந்த போட்டியில் வென்றுவிட்டால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதி சுற்றில் முன்னேறும் வாய்ப்புள்ளது.

  ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலும் இந்தியா, நமிபியா அணியை அதிகபட்ச ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும். இந்தியா - ஸ்காட்லாந்து போட்டிக்கு பின் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 4 புள்ளிகளுடன் +1.62 ரன்ரேட்டில் 3-வது இடத்தில் உள்ளது. குரூப் 2 பிரிவில் அதிக ரன்ரேட் உடன் இந்தியா இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையின் முடிவில் தான் அரையிறுதிக்கு முன்னேறும் அணி தெரியவரும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup