• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WC 2021| முன்னாள் தொடக்க வீரர்கள், இப்போது எதிரெதிர் முகாம்களில்- 3 மணி நேரத்துக்கு நட்பெல்லாம் கிடையாது- ஜஸ்டின் லாங்கர்

T20 WC 2021| முன்னாள் தொடக்க வீரர்கள், இப்போது எதிரெதிர் முகாம்களில்- 3 மணி நேரத்துக்கு நட்பெல்லாம் கிடையாது- ஜஸ்டின் லாங்கர்

பாக் பேட்டிங் கோச் ஹெய்டன் மற்றும் ஆஸி கோச் லாங்கர்.

பாக் பேட்டிங் கோச் ஹெய்டன் மற்றும் ஆஸி கோச் லாங்கர்.

வியாழக்கிழமை பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியில் அந்த 3 மணி நேரம் எங்கள் நட்புறவை கொஞ்சம் ஆஃப் செய்து விடுவேன். கிரிக்கெட் தான்.

  • Share this:
    யுஏயில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் வரும் வியாழனன்று மோதுகின்றன. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் கோச் மேத்யூ ஹெய்டனும் ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள். இப்போது எதிரெதிர் முகாம்களில் எதிரிகள்.

    எனவே வியாழக்கிழமையன்று தனக்கும் மேத்யூ ஹெய்டனுக்குமான நட்பு என்பது 3 மணி நேரத்திற்கு அதாவது அரையிறுதி போட்டி நடைபெறும் வரை ஆஃபில் இருக்கும் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா தோற்ற ஒரே மேட்ச் இங்கிலாந்துக்கு எதிராக துபாயில் முதலில் இங்கிலாந்தினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட போதுதான். 21/4 என்று சரிந்து இங்கிலாந்து பிறகு பின்னி எடுக்க படுதோல்வி கண்டது ஆஸ்திரேலியா, ஆனால் இன்று அரையிறுதியில் உள்ளது, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது, பாகிஸ்தான் ஆல் வின் என்ற 100% வின் என்ற ரெக்கார்டுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஒரு கால ஆதிக்க அணியில் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர் ஓப்பனிங் என்றால் நடுங்காத வேகப்பந்து வீச்சே இல்லை என்று கூறலாம், ஒரு காலத்தில் எப்படி ராய் பிரெட்ரிக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், விவ் ரிச்சர்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் 3 வீரர்களாக இறங்கி உலக பவுலர்களை நடுங்கச் செய்தனரோ அதே போல் லாங்கர், ஹெய்டன், பாண்டிங் பெரிய அச்சுறுத்தலாக ஆஸ்திரேலிய அணியில் திகழ்ந்தனர்.

    இந்நிலையில் முன்னாள் கிரேட்கள் ஹெய்டன், லாங்கர் எதிரெதிர் முகாம்களில் பயிற்சித் திறனில் இருப்பது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ஜஸ்டின் லாங்கர் கூறும்போது, “ஆம், நானும் ஹெய்டனும் சிறந்த நண்பர்கள், இப்போது எதிரெதிர் முகாம்களில் போட்டியை அந்தந்த அணிக்காக பார்த்துக் கொண்டிருக்கி்றோம். ஹெய்டன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

    நாங்கள் இருவரும் மாறி மாறி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மேசேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். பெரிய ஆலோசனைகளெல்லாம் இல்லை, இருவருமே பணியில் தீவிரமாக இருக்கிறோம். நான் ஹெய்டனை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், நான் நீண்ட காலம் அவரை சந்திக்கவே இல்லை. கிரிக்கெட்டில் நிறைய எனக்கும் அவருக்கும் உறவின் பாலமாக இருக்கிறது.

    வியாழக்கிழமை பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியில் அந்த 3 மணி நேரம் எங்கள் நட்புறவை கொஞ்சம் ஆஃப் செய்து விடுவேன். கிரிக்கெட் தான்.” என்றார் ஜஸ்டின் லாங்கர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: