• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021, PAK vs AUS: பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அரையிறுதி; நேருக்கு நேர் ரெக்கார்ட், ஆடும் வீரர்கள்: முழு விவரம்

T20 World Cup 2021, PAK vs AUS: பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அரையிறுதி; நேருக்கு நேர் ரெக்கார்ட், ஆடும் வீரர்கள்: முழு விவரம்

பாகிஸ்தான் வீரர்கள்.

பாகிஸ்தான் வீரர்கள்.

பாகிஸ்தான் அணி உத்தேச லெவன்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பகர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹின் அப்ரீட், ஹாரிஸ் ராவுஃப்.

  • Share this:
    யுஏஇயில் உள்ள துபாயில் இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பையின் இன்னொரு அரையிறுதியில் இன்று தோல்வியே அடையாத பாகிஸ்தான் அணி மீட்டெழுச்சி பெற்ற ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் கடைசியாக மோதிய த்ரில் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

    ஆஸ்திரேலிய அணி சரியான நேரத்தில் மீண்டெழுந்ததால் பாகிஸ்தானுக்கு சிக்கல் அதிகம் அதே வேளையில் பாகிஸ்தானின் ஸ்பின்னர்கள் இமாத் வாசிம், ஷதாப் கான், ஹபீஸ் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தல், அதே போல் பாகிஸ்தான் டாப் ஆர்டருக்கு பாட் கமின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் பெரிய அச்சுறுத்தல். ஆடம் ஜாம்ப்பா இந்தத் தொடரில் பெரிய அளவில் வீசி வருகிறார். அதிக விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

    வார்னர் பார்முக்குத் திரும்பியுள்ளதும் பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல்தான், வார்னரை ஷாகின் அப்ரீடிதான் ஏதாவது செய்ய வேண்டும். பாபர் அசாம் சராசரி இந்தத் தொடரில் 71.33. எனவே ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் பாபர் அசாம்தான், இவர் ஒருமுனையில் நின்றால் அனைவரும் அடிப்பார்கள், அதே போல் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் ஷோயப் மாலிக், அசார் அலி ஆகியோர்களாவார்கள்.

    டி20க்களில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா:

    இதுவரை 22 போட்டிகளில் டி20க்களில் ஆஸ்திரேலியாவை சந்தித்துள்ள பாகிஸ்தான் 13 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா 9 முறை வென்றுள்ளது இன்று 10 ஆகுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

    ஐசிசி டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் 6 முறை மோதியுள்ளன, இதில் சம வெற்றியென்று இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி உத்தேச லெவன்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பகர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹின் அப்ரீடி ஹாரிஸ் ராவுஃப்.

    ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டேவிட் வார்னர், ஏரோன் பிஞ்ச், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், வேட், கமின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்ப்பா,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: