• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பை: 8 விக்கெட் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பை: 8 விக்கெட் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

 டி20 உலகக் கோப்பை: 8 விக்கெட் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பை: 8 விக்கெட் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் என்ற சொற்ப இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

  • Share this:
    துபாய் கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில், நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் அதிரடி மாற்றமாக தொடக்க வீரர்களாக இஷான்கிஷானும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதைத்தொடர்ந்து, அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான்கிஷான் 8 பந்தில் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இஷான் கிஷனை தொடர்ந்து, கே.எல்.ராகுல், ரோகித், கோலி, பண்ட் என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐவரும் ரன் சேர்க்க தடுமாறி, விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 23 ரன்களை எடுத்து அவுட்டானார்.

    இந்திய அணி 6வது ஓவரில் இருந்து 15வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 73 பந்துகளுக்கு பிறகு 17வது ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தது. இந்த இன்னிங்ஸில் மொத்தம் 54 பந்துகள் ரன் ஏதும் எடுக்கவில்லை. அனைத்தும் டாட் பந்துகளாக வீசி இருந்தது நியூசிலாந்து.

    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் போராடி 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 19 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களை எடுத்தனர்.

    தொடர்ந்து, 111 ரன்கள் என்ற சொற்ப ரன்களை இலக்காக கொண்டு, நியூசிலாந்து தனது ஆட்டத்தை துவங்கியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து அணி, பவர்ப்ளேவில் 1 விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து ஆணி 8.3 ஓவர்களில் 66 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்திய டேரில் மிட்செல் 35 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 33 ரன்களுடனும், கான்வே 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: