• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணியின் பிரச்சனையே ‘ஹைப்’ தான் - நாசர் ஹுசைன் சூசகம்

இந்திய அணியின் பிரச்சனையே ‘ஹைப்’ தான் - நாசர் ஹுசைன் சூசகம்

நாசர் ஹுசைன்.

நாசர் ஹுசைன்.

கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த இங்கிலாந்தே 2019-ல் தான் உலகக்கோப்பையை வென்றது, நம் கபில்தேவ் மே.இ.தீவுகளின் ஆதிக்கத்தை ஒழித்து 1983-ல் உலகக் கோப்பையை வென்றவுடன் இதே இங்கிலாந்து ஊடகங்கள் லக், அதிர்ஷ்டம் என்றெல்லாம் பொறாமையில் எழுதியதையும் நாம் மறக்க முடியுமா என்ன?

  • Share this:
    இங்கிலாந்து முன்னாள் வீரர்களுக்கு அங்கு போய் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு செம உதை கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதைத் தாங்க முடியாமல் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் வெளியேறியதை விமர்சனம் செய்து மகிழ்கின்றனர், அந்தப் பட்டியலில் நாசர் ஹுசைன் இணைந்துள்ளார்.

    கோலிதான் இருமுறை கூறிவிட்டாரே நாங்கள் பயந்து பயந்து ஆடினோம் என்று அதையே நாசர் ஹுசைன் ஒருமுறை கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார், இத்தனைக்கும் நாசர் ஹுசைன் இந்தியாவில் பிறந்தவர், சென்னை காரர். கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த இங்கிலாந்தே 2019-ல் தான் உலகக்கோப்பையை வென்றது, நம் கபில்தேவ் மே.இ.தீவுகளின் ஆதிக்கத்தை ஒழித்து 1983-ல் உலகக் கோப்பையை வென்றவுடன் இதே இங்கிலாந்து ஊடகங்கள் லக், அதிர்ஷ்டம் என்றெல்லாம் பொறாமையில் எழுதியதையும் நாம் மறக்க முடியுமா என்ன?

    இங்கிலாந்து அணியின் எதிரியே அதன் ஊடகங்கள்தான், அதே போல்தான் இப்போது இந்திய ஊடகங்களும் கிரிக்கெட்டில் செயல்படுகிறது, ஓவர் ஹைப் கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஏதோ ஆடும் முன்பே ஜெயித்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆடும்போது கனவுநிலையில் ஆடிய இந்திய அணி தோற்றபோதுதான் தூக்கிவாரிப்போட்டு விழித்துக் கொண்டது, அந்த பீதியிலிருந்து வெளி வராமல்தான் நியூசிலாந்துக்கு எதிராகவும் ஆடியது, இன்று வெளியேறியது.

    இது தொடர்பாக நாசர் ஹுசைன் கூறியதாவது, “இந்திய அணி வெளியுலகம் சென்று தங்களை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி வீரர்களிடம் ஏராளமான திறமை இருக்கிறது. ஆனால் ஐசிசி போட்டிகளில் மட்டும் பாச்சா பலிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியினர் பயந்து பயந்துதான் விளையாடியதுதான் தோல்விக்கு காரணம். அச்சமில்லாத கிரிக்கெட்டை விளையாடவில்லை. உலகக் கோப்பையை வெல்ல தகுதியானவர்கள் இந்திய அணிதான் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வீரர்கள் ஃபார்மில் இருக்கிறார்கள், நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி தோற்று பின்னடைவு ஏற்பட்டது. பவர்ப்ளே ஓவரில் ஷாகின் அப்ரிடி இரு அருமையான பந்துகளில் ரோஹித் சர்மா, ராகுலை வெளியேற்றினார்.

    இந்திய அணியில் சில நேரங்களில் ஒரு பிரச்சினை எழும். டாப் ஆர்டர் சிறப்பாக ஆடினால், நடுவரிசை சிறப்பாக பேட் செய்யமாட்டார்கள்.இதுபோன்ற நேரத்தில் நமக்கு பி பிளான் அவசியமாகும். அது இந்திய அணியிடம் இல்லை.

    இந்திய அணி திறமையான வீரர்களைக் கொண்டிருக்கிறது . ஆனால் வீரர்கள் தேர்வில் உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது, நியூஸிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா, ராகுல் கூட்டணியைப் பிரித்தது சரியானது உத்தி அல்ல. உலகத் தரம் வாய்ந்த இரு வீரர்களையும் பிரித்திருக்கக் கூடாது” இவ்வாறு நாசர் ஹூசைன் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: