ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 Worldcup: நிறவெறி விவகாரம்: டி காக்-ஐ விளாசிய பொலார்ட்

T20 Worldcup: நிறவெறி விவகாரம்: டி காக்-ஐ விளாசிய பொலார்ட்

வங்கதேசத்துக்கு எதிராக பாதியிலேயே வெளியேறிய பொலார்டு

வங்கதேசத்துக்கு எதிராக பாதியிலேயே வெளியேறிய பொலார்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நிறவெறிக்கு எதிராக முழந்தாளிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்க மறுத்ததால் குவிண்டன் டி காக் கடும் சிக்கலில் இருக்கிறார், அவரது செயலை மே.இ.தீவுகள் கேப்டன் பொலார்டு கடுமையாகக் கண்டித்துள்ளார். டி காக் இதற்கான மன்னிப்பு கேட்டாலும் இதை ஏன் செய்ய வேண்டும் என்ற அவரது பேச்சு மீண்டும் சர்ச்சைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக கிரன் பொலார்ட் கூறியதாவது: “இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு உலகம் அறிந்ததுதான். ஒரு அணியாக மக்களில் ஒரு அங்கமாக நிறவெறிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் எங்கள் பணி. இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

ஒவ்வொருவருக்கும் இந்த விவகாரத்தில் கருத்துகள் உள்ளன. இதில் நான் எப்போதும் கூறுவது ஒன்று தான். இந்த பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் அனைவரும் இதற்குக் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். இதைத்தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். அதேநேரம் இது பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கல்விக்கும் முக்கிய பங்கு உள்ளது என்றே நான் நினைக்கிறேன். பரிதாபப்பட்டு செய்யத் தேவையில்லை யாரும் இதனை எங்கள் மீது பரிதாபப்பட்டோ அல்லது வருத்தும் தெரிவிக்கும் வகையிலேயோ செய்யத் தேவையில்லை.

இருப்பினும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் இது குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. அதேநேரம் இதில் ஒரு தெளிவான பொருள் கிடைத்தவுடன் டி காக்கைப் பற்றி என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியும். முதல்முறை எந்த ஒரு வீரரும் இப்படி கருப்பர் ‘வாழ்க்கை முக்கியம்’ பிரச்சாரத்தை எதிர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. முதல்முறை இப்படிக் கேள்விப்படுகிறேன். நாங்கள் தொடர்ந்து இந்த இந்த பிரச்சாரத்திற்குக் குரல் கொடுப்போம். இது உரிமைக்கான குரல்" என்று அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தற்போது வெளியிட்டுள்ள குறிப்பில் டி காக் மன்னிப்புக் கேட்டதாகவும் அவரும் முழங்காலிட்டு நிறவெறி எதிர்ப்புச் செய்கை செய்ய ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.

“நிறவெறிக்கு எதிராக ஒருங்கிணைந்த குரல் கொடுப்பது ஒரு அற/நீதிச் செய்கையாகும். அரசியல் செய்கை அல்ல. ஆனால் இதைச் செய்யச்சொல்லி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நேரம் வீரர்களை கொஞ்சம் நிலைதடுமாறச் செய்திருக்கலாம். அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது, குவிண்டன் டி காக்கும் நான் நிறவெறியாளன் இல்லை என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Pollard, Racism, T20 World Cup