Home /News /sports /

அப்படிப் போடு! முன்னாள் கேப்டனை அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

அப்படிப் போடு! முன்னாள் கேப்டனை அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் 2 போட்டிகளில் தோற்று வெளியேறும் நிலையில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆபெட் மெக்காய்க்குப் பதிலாக முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மீதமுள்ள போட்டிகளுக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஒரு பிரமாதமான ஆல்ரவுண்டரை ரிசர்வில் வைத்து அழகு பார்த்தது வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் தற்போது ஹோல்டரை மீதமுள்ள உலகக்கோப்பைப் போட்டிகளுக்குச் சேர்த்துள்ளது. இவரைச் சேர்க்க ஐசிசி அனுமதியளித்தது. பங்களாதேஷுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஜேசன் ஹோல்டர் அணியில் இருப்பார்.

    ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸுக்காக 27 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல் 2021 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முக்கியமான வீரராகத் திகழ்ந்தார். கடந்த டி20 உலகக்கோப்பை சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் இந்த முறை இங்கிலாந்திடம் 55 ரன்களுக்குச் சுருண்டது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஓரளவுக்கு சுமாரா பேட்டிங் செய்த போதும் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போது 3 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்றேயாக வேண்டும். வெஸ்ட் இண்டீஸின் பேட்டிங் பெரிய பிரச்சனைதான், இரண்டு போட்டிகளிலும் சவாலான இலக்கை எட்டவில்லை. மீதமுள்ள போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு சவால்தான், ஏனெனில் வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை 3 அணிகளுமே பார்மில் இருக்கின்றனர். வங்கதேசம் நம்ப முடியாத அணி எப்போது வேண்டுமானாலும் எழுச்சி பெறலாம்.

    ஆஸ்திரேலியாவும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் போராடி வென்றது, ஆனால் வெற்றிப் பின்புலத்தில் இருப்பதால் அடுத்த போட்டியில் நிச்சயம் பேட்டிங் பார்முக்கு வார்னர், மேக்ஸ்வெல், பிஞ்ச் போன்றோர் திரும்பினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏகப்பட்ட பிரச்சனைதான்.

    Also Read: பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா?- ஹர்பஜன், முகமது ஆமீர் கடும் மோதல்

    Published by:Muthukumar
    First published:

    Tags: T20 World Cup

    அடுத்த செய்தி