• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021| இந்திய அணி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது: சேவாக்

T20 World Cup 2021| இந்திய அணி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது: சேவாக்

சேவாக்.

சேவாக்.

நம் பவுலிங்கிலும் ஊடுருவல் தன்மை இல்லை. முதல் பந்திலிருந்தே வில்லியம்சனின் பீல்டிங் செட்-அப் , பவுலிங் மாற்றங்கள் பிரமாதம். அவரது திட்டமிடல் பிரமாதம்.

  • Share this:
    நியூசிலாந்துடன் இந்திய அணி ஆடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளித்ததாக சேவாக் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வி கண்டது. முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 110 ரன்களே எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப்பிடித்தது.

    முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து இருந்த இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டகாரர் ஷேவாக் தனது டுவிட்டர் பதிவில், "இந்திய அணி விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. நியூசிலாந்து அணி அற்புதமாக செயல்பட்டது. இந்திய அணியினரின் உடல் மொழியும் பெரிதாக இல்லை.

    கடந்த காலங்களில் சில போட்டியை போன்று பேட்ஸ்மேன்களின் ‘ஷாட்’ தேர்வு மோசமானதாக இருந்தது. நாம் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது என்பதை நியூசிலாந்து ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. இந்த தோல்வி இந்திய அணியை பாதிக்கும். நாம் தீவிரமான சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

    லெஜண்ட் மற்றும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “நியூசிலாந்து அணி என்ன செய்கிறது என்பதை இந்திய அணியினரால் கண்டு பிடிக்க முடியவில்லை. நம் பேட்டர்கள் சுலபமாக சிங்கிள் எடுக்க முடியாமல் செய்து விட்டனர். இதனால் பெரிய ஷாட்களுக்குப் போய் அது கைகொடுக்காமல் விக்கெட்டுகளை இழந்தனர்.

    நம் பவுலிங்கிலும் ஊடுருவல் தன்மை இல்லை. முதல் பந்திலிருந்தே வில்லியம்சனின் பீல்டிங் செட்-அப் , பவுலிங் மாற்றங்கள் பிரமாதம். அவரது திட்டமிடல் பிரமாதம். முதல் 6 ஓவரில் 35/2 என்று ஆனோம். இதில் ஒரு ஓவரில் மில்னே ஓவரில் 15 வந்தது மற்றபடி 5 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே வந்தது. ஆனால் என்னைப்பொறுத்தவரை 6-10 ஓவர்கள் மிகவும் முக்கியம்.

    இந்தக் காலக்கட்டத்தில் நாம் 13 ரன்களை மட்டுமே எடுத்து 1 விக்கெட்டை இழந்தோம். இந்த தருணம்தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம். ரோகித், விராட் என்று பெரிய ஷாட்களை ஆடப்போய் ஆட்டமிழந்தனர், காரணம் சிங்கிள் வாசல் அடைக்கப்பட்டது என்றார் சச்சின் டெண்டுல்கர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: