• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup Warm Up| இங்கு கோலி திணறுகிறார்; அங்கு பாபர் அசாம் அரைசதம் விளாசுகிறார்- பாக். வெற்றி

T20 World Cup Warm Up| இங்கு கோலி திணறுகிறார்; அங்கு பாபர் அசாம் அரைசதம் விளாசுகிறார்- பாக். வெற்றி

பாபர் அசாம், விராட் கோலி.

பாபர் அசாம், விராட் கோலி.

டி20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்.24ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் செம பார்மில் இருக்க நம் இந்திய கேப்டன் விராட் கோலியோ திணறி வருகிறார்.

  • Share this:
    இந்தியா-இங்கிலாந்து வார்ம் அப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையாகத் திணறினார். பவுண்டரியே அடிக்க முடியவில்லை. கடைசியில் லியாம் லிவ்ங்ஸ்டன் என்ற பார்ட்டைம் பவுலர் பந்தை தூக்கி அடிக்கிறேன் என்று கொடியேற்றி ஆட்டமிழந்தார். மாறாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 41 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சர் என்று வெற்றிகரமாக இலக்கை விரட்டியுள்ளார். பாபர் அசாமை விராட் கோலியுடன் சிலர் ஒப்பிட்டுப் பேசுவார்கள், ஆனால் கோலி சாதனையின் உச்சம் பாபர் அசாம் கோலியைப் பின் தொடர்பவரே.

    முதலில் பேட் செய்த கெய்ரன் பொலார்டு தலைமை மே.இ.தீவுகள் அணி இமாத் வாசிம், ஷாகின் ஷா அப்டீரி, ராவுஃப், ஹசன் அலி அபார பந்து வீச்சில் திணறியது. யுனிவர்ஸ் பாஸ் பாவம் சொதப்பு சொதப்பென்று சொதப்பி 30 பந்துகளில் 2 பவுண்டரி மட்டுமே எடுத்து 20 ரன்களில் ஹாரிஸ் ராவுஃப் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற ஷிம்ரன் ஹெட்மையர் 28 ரன்கள் எடுக்க கடைசியில் கெய்ரன் பொலார்ட் 5 பவுண்டரிகளுடன் 10 பந்துகளில் 23 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 130/7 என்று மட்டுப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 13 ரன்களில் ஏமாற்ற பாபர் அசாம், பகர் ஜமான் இணைந்து ஸ்கோரை 12 ஓவர்களில் 94 என்று உயர்த்தினர் அப்போது பாபர் அசாம் 50 ரன்களில் ஹெய்டன் வால்ஷ் பந்தில் வெளியேறினார், அடுத்த பந்திலேயே மூத்த வீரர் முகமது ஹபீசும் டக் அவுட் ஆக, கடைசியில் பகர் ஜமான் (46), ஷோயப் மாலிக் 14 நாட் அவுட் என்று பாகிஸ்தான் 131/3 என்று அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் நெட் பவுலராக குறுக்கப்பட்ட ரவி ராம்பால் 3 ஓவர் 19 ரன் 1 விக்கெட். ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட். பாகிஸ்தான் அணி நல்ல பார்மில் இருப்பதாக தெரிகிறது.

    இந்தியாவுடன் முதல் போட்டியில் அக்டோபர் 24ம் தேதி மோதும் வேளையில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்த பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீசை வீழ்த்த இந்திய அணி கேப்டன் கொலி பார்முக்கு வருவது முக்கியமாக பாபர் அசாம் பிரமாதமாக தொடங்கியுள்ளார், பாகிஸ்தான் பவுலிங் ஹசன் அலி, ஷாகின் அப்ரீடி, இமாத் வாசிம், ராவுஃப் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றனர்.

    Also Read: Ind vs Eng warm-up| கோலி, புவனேஷ்வர், சூரியகுமார், ஹர்திக் பாண்டியா மோசம்; ராகுல், இஷான் கிஷன் அதிரடியில் இந்தியா வெற்றி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: