• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • இது ஆரம்பம்தான் : வெற்றி கேப்டன் பாபர் அசாம்

இது ஆரம்பம்தான் : வெற்றி கேப்டன் பாபர் அசாம்

பாபர் அசாம், பாகிஸ்தன் கேப்டன், இந்தியா-பாகிஸ்தான் டி20

பாபர் அசாம், பாகிஸ்தன் கேப்டன், இந்தியா-பாகிஸ்தான் டி20

 • Share this:
  இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பை போட்டிகளில் முதல் வெற்றி என்றாலும் இப்படியா போட்டு தோய்த்து எடுப்பது என்பது போன்ற அடி. டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே பாபர் அசாம், முகமது ரிஸ்வான் யார் என்று காட்டினர். 152 ரன்கள் இலக்கை விக்கெட்டையே பறிகொடுக்காமல் வெளுத்து வாங்கி விட்டது பாகிஸ்தான்.

  ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களையும் பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களையும் எடுத்தனர், விராட் கோலி இந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் மீது பிரஷர் ஏற்றியிருக்கலாம். ஆட்ட நாயகன் ஷாகின் அஃப்ரீடி, முகம்து ஆமிர் போல இடது கை இன்ஸ்விங்கர் வாசிம் அக்ரம் காலத்திலிருந்தே இந்திய பேட்ஸ்மென்களுக்கு பிரச்சனை என்பதைப் புரிந்து கொண்டு வீசினார். அதற்கான பலன் கிடைத்தது அதே போல் டெத் ஓவரில் விராட் கோலியை ஸ்லோ பவுன்சர் போட்டு காலி செய்தார் அப்ரீடி, அதனால் மிகச்சரியாக ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  பாகிஸ்தானின் இந்தத் துல்லிய வெற்றி குறித்து, கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது, “எங்கள் திட்டத்தை நன்றாகச் செயல்படுத்தினோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைக் கைப்பற்றியது உதவியது. ஷாகின் விக்கெட்டுகள் எங்களுக்கு நம்பிக்கையூட்டின, ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்தினர். சேசிங்கில் ரிஸ்வானுடன் பேசியது என்னவெனில் அவசரப்படாமல் சிம்பிளாக ஆடுவதுதான்.

  கிரீசில் டீப்பாக பின்னால் சென்று ஆடினோம், 8வது ஓவருக்குப் பிறகு பனிப்பொழிவு ஆரம்பித்தவுடன் பந்துகள் நன்றாக மட்டைக்கு வந்தன. இதுதான் ஆரம்பம். இதிலிருந்து மேலே செல்வதற்கான நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொள்வோம். எங்கள் மீது பெரிய பிரஷர் எல்லாம் இல்லை. இந்திய அணிக்கு எதிரான கடந்த தோல்விகளை நாங்கள் நினைக்கக்கூட இல்லை, அவற்றைப்பற்றிக் கவலையும் படவில்லை.

  நாங்கள் நன்றாகத் தயாரித்துக் கொண்டுள்ளோம், உலகக்கோப்பைக்கு முன்பாக வீரர்கள் சிலபல போட்டிகளில் ஆடினர். நான் அனைத்து வீரர்களையும் ஆதரிக்க விரும்புகிறேன்” என்றார் பாபர் அசாம்.

  Also Read: IND vs PAK, T20 World Cup 2021: விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்தான் பிரச்சனை

  இதையும் படிங்க: பாகிஸ்தான் போட்டியில் இந்திய வீரர்களின் செயலுக்கு குவியும் பாராட்டு - ரசிகர்கள் வாழ்த்து

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: