Home /News /sports /

IND vs AFG: பெரிசுங்கள ஓரங்கட்டிட்டு இஷான் கிஷன், ரிஷப் பண்ட் ஓபனிங் இறங்க வேண்டும்

IND vs AFG: பெரிசுங்கள ஓரங்கட்டிட்டு இஷான் கிஷன், ரிஷப் பண்ட் ஓபனிங் இறங்க வேண்டும்

டி20 உலகக்கோப்பை பண்ட், இஷான் கிஷன்.

டி20 உலகக்கோப்பை பண்ட், இஷான் கிஷன்.

இந்திய அணிக்கு இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் 2 தோல்விகளுக்குப் பிறகே இழக்க ஒன்றுமில்லை, எனவே ஒருவிதமான கவலையற்ற சுதந்திர (careless abandon)மனோபாவத்தில் இறங்கினால்தான் ஆப்கானிஸ்தான் ஸ்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க முடியும், பெரிய இலக்கை நிர்ணயிக்கலாம் அல்லது விரட்டினால் குறைந்த ஓவர்களில் வெல்லலாம்.

மேலும் படிக்கவும் ...
இந்திய அணிக்கு இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் 2 தோல்விகளுக்குப் பிறகே இழக்க ஒன்றுமில்லை, எனவே ஒருவிதமான கவலையற்ற சுதந்திர (careless abandon)மனோபாவத்தில் இறங்கினால்தான் ஆப்கானிஸ்தான் ஸ்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க முடியும், பெரிய இலக்கை நிர்ணயிக்கலாம் அல்லது விரட்டினால் குறைந்த ஓவர்களில் வெல்லலாம்.

இதில் ஓப்பனிங்கில் பரிசோதனை செய்தது அன்று பயனளிக்கவில்லை. கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என்று தோல்வி கண்டோம், ஆனால் மாறாக இஷான் கிஷன், ரோகித் சர்மாவை இறக்கியிருந்தால் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கும், ரோகித் சர்மா இஷான் கிஷனுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்திருப்பார். மேலும் ரோகித்துக்கு பழக்கமில்லாத 3ம் நிலையில் இறக்கியிருக்கக் கூடாது, ஒன்று ஒப்பனிங் இல்லையேல் தோனி போல் பினிஷிங் ரோல் என்று அமைத்திருக்க வேண்டும்.

இன்று ஆப்கானிஸ்தான் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங்கை நம்பியுள்ளது. முஜிபுர் ரஹ்மான் என்ன போடுகிறார் என்பதே புரிய நேரமாகும். ரஷீத் கான், முகமது நபி என்று நம்மைப் படுத்தி எடுக்க ஆட்கள் அங்கு இருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழக்கக் கூடியவர்களே.

ஆகவே இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷன், ரிஷப் பண்ட்டை தொடக்கத்தில் களமிறக்கினால் பயனுள்ளதாக இருக்கும், இதை ஆப்கானிஸ்தானும் சற்றும் எதிர்பார்க்காது. ரிஷப் பண்ட் கிரீசில் இருந்தால் ஸ்பின் சிதறடிக்கப்படும். அதுவும் பவர் ப்ளேயில் அவர் சுதந்திரமாக ஆடச் சரியாக இருக்கும் அவரை அப்படித்தான் பயன்படுத்த வேண்டும்.

ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டிற்கு அற்புதமான சீசன் 2018-தான் 14 போட்டிகளில் 684 ரன்கள், சராசரி 52.61. ஸ்ட்ரைக் ரேட் அபரிமிதமான 173.60. ஒரு செஞ்சுரி 5 அரைசதம். அப்போது 3ம் நிலையில் இறங்கி ஆடினார் ரிஷப் பண்ட். இவரை ஓப்பனிங் இறக்குவது ரிஸ்க்தான் ஆனால் முயற்சிப்பதனால் ஒன்றும் ஆகி விடாது.

அதே போல் இஷான் கிஷன் இவரை எந்த டவுனிலும் இறக்கலாம், ஐபிஎல் 2021-ல் ஹைதராபாத்துக்கு எதிரே 80+ ரன்கள் அதிவேகத்தில் அடித்தார். இவரும் சூரிய குமார் யாதவும் மும்பை ஸ்கோரை 235 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

இருவரும் பயமறியா காளைகள், ஆப்கான் ஸ்பின்னர்களுக்கு எதிராக முட்ட விட வேண்டியதுதான். இருவருக்கும் மாட்டினால் பெரிய பாக்கியம்தான். அதிர்ஷ்டம்தான். இது கிளிக் ஆகிவிட்டால் பிறகு சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என்று இறக்கி விட்டு பிறகு பினிஷிங்கில் கோலி, ரோகித் சர்மா, ராகுலைக் கொண்டு வர வேண்டும்.

அதாவது இந்திய அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, ராகுல் சாகர், பும்ரா, ஷமி, அஸ்வின்.

இதில் ஜடேஜா அல்லது எந்த பவுலர் அடி வாங்கினாலும் ஹர்திக் பாண்டியாவை ஒன்றிரண்டு ஓவர்களை வீசுமாறு செய்து விட்டால் போதும், கே.எல். ராகுல் ஒரு மேட்ச் உட்கார வைக்கப்படலாம்.
Published by:Muthukumar
First published:

Tags: Rishabh pant, T20 World Cup

அடுத்த செய்தி