2019 உலகக்கோப்பை நினைவிருக்கிறதா?- டேஞ்சர் ஆப்கானிஸ்தான் - பெரிய மார்ஜினில் இந்தியா வெல்ல வேண்டும்
2019 உலகக்கோப்பை நினைவிருக்கிறதா?- டேஞ்சர் ஆப்கானிஸ்தான் - பெரிய மார்ஜினில் இந்தியா வெல்ல வேண்டும்
டி20 உலககோப்பை இந்தியா-ஆப்கான் இன்று மோதல்- அபுதாபி.
அனைத்திற்கும் மேலாக 2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்ற போது விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது ஆப்கானிஸ்தான். ஆப்கான் ஸ்பின்னர்கள் சூப்பர் ஸ்டார் இந்திய பேட்டிங்கை 224 ரன்களுக்கு மடக்கினர்.
அபுதாபியில் இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி ஆபத்தான் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது, இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பெரிய மார்ஜினில் வெல்ல வேண்டும், அப்போதுதான் நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளையும் பெரிய மார்ஜினில் வீழ்த்தி நெட் ரன் ரேட்டில் உயர்ந்து மற்ற போட்டிகளின் முடிவுடன் அரையிறுதி வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
இதற்கு முன்பாக இரு அணிகளும் டி20 உலகக்கோப்பையில்தான் மோதியுள்ளன மே.இ.தீவுகளிள் உள்ள கிராஸ் ஐஸ்லெட்டில் நடந்த போட்டியில் இந்திய அணி 2010 டி20 உலகக்கோப்பையில் ஆப்கானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பிறகு மீண்டும் 2012 டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் ஆப்கானை இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
அனைத்திற்கும் மேலாக 2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்ற போது விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது ஆப்கானிஸ்தான். ஆப்கான் ஸ்பின்னர்கள் சூப்பர் ஸ்டார் இந்திய பேட்டிங்கை 224 ரன்களுக்கு மடக்கினர். விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்ததாக நம் நெட்டிசன்கள் கேலி செய்தனரே அந்த கேதார் ஜாதவ் 52 ரன்கள் எடுத்தார், தோனி 52 பந்தில் 28 என்று பிளேடு போட்டார்.
தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 106/4 என்று தடுமாறியது, ஆனால் ஸ்பின்னில் அசத்திய முகமது நபி பேட்டிங்கில் அச்சமற்ற அதிரடியில் 52 ரன்கள் சாத்த, நஜிபுல்லா சத்ரான் 21, ரஷீத் கான் 14 என்று இந்திய ஸ்கோரை நெருங்கி 213 ரன்களுக்கு அல் அவுட் ஆகினர். ஆனால் காரணம் ஷமியின் ஹாட்ரிக், பும்ராவின் அசத்தல் பவுலிங்கே. இப்படியாக அன்று கோலி வயிற்றில் மோட்டர் ஓடவிட்ட அணி இன்று இந்தியாவைப்படுத்தாது என்று என்ன நிச்சயம். நபி பவுலிங்கில் இந்தியா அந்தப் போட்டியில் பவுண்டரியே அடிக்கவில்லை என்பதும் முக்கியம்.
அபுதாபி பிட்ச் வெற்றி விகிதம்:
இந்த உலகக்கோப்பையில் இதுவரை அபுதாபியில் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் சேஸ் செய்த அணியே வென்றுள்ளது. 2021-ல் அபுதாபியில் வேகப்பந்து வீச்சாளர்கள் 76 மேட்சில் 308 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்கள் 76 மேட்ச்களில் 128 விக்கெட்டுகளையே எடுத்துள்ளனர். ரஷீத் கானின் செல்லப்பிள்ளை ராகுல், ஏனெனில் ராகுலை இவர் 18 ரன்களுக்கு 3 முறை வீழ்த்தியுள்ளார். மாறாக இஷான் கிஷன் 51 பந்துகளில் ரஷீத் கானை 64 ரன்கள் விளாசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.