• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ’நல்ல வேளையாக ஆப்கானுடன் ஷார்ஜாவில் இந்தியா ஆடவில்லை- அப்படி இருந்தால் இந்தியாவுக்கு கஷ்டம்தான்’

’நல்ல வேளையாக ஆப்கானுடன் ஷார்ஜாவில் இந்தியா ஆடவில்லை- அப்படி இருந்தால் இந்தியாவுக்கு கஷ்டம்தான்’

விராட் கோலி இன்னும் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். .

விராட் கோலி இன்னும் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். .

  • Share this:
    பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணியைப் பற்றிய மீடியா ஹைப், சோஷியல் மீடியா உத்வேகம் எல்லாம் தோல்விக்குப் பிறகு காணாமல் போனது. இந்நிலையில் இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் டாப் ஆர்டர் ஆடினால்தான் உண்டு, மிடில் ஆர்டர் தண்டம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இந்தியா இந்தத் தொடரில் பிரகாசிக்க வேண்டுமெனில் டாப் ஆர்டர் வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆடினால்தான் உண்டு, ஏனெனில் சூரியகுமார் யாதவ் தரமான பந்து வீச்சுக்கு எதிராக எப்படி ஆடுவார் என்பது தெரியவில்லை, ரிஷப் பண்ட் பார்மும் நம்பகத்தன்மையற்று இருக்கின்றது. விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஏமாற்றமளித்தனர். இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா கூறுவது என்னவெனில், “இந்த வடிவத்தில் ரிஷப் பண்ட்டிடம் நாம் எதிர்பார்க்கும் அந்த செல்வாக்கு இல்லை. சூரியகுமார் யாதவ் இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டையே ஆட ஆரம்பித்துள்ளார் எனவே அனுபவம் குறைவு.

    அவருக்குரிய மரியாதை அளித்து கூறுகிறேன், அவர் சமீபமாக பெரிய அளவில் ரன்களை அடித்து விடவில்லை. டாப் பவுலிங்குக்கு எதிராக சூரியகுமார் யாதவ்வின் திறமைகள் இன்னும் சோதிக்கப்படவில்லை. மேலும் சூரியகுமார் யாதவ் தன் முதல் உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் ஆடுகிறார். ஹர்திக் பாண்டியா பார்மில் இல்லை எனவே நம் அணியின் 4,5,6-ம் நிலை வீரர்கள் சரியில்லை எனும்போது, டாப் 3 தான் ஆட வேண்டும், ஒவ்வொரு போட்டியிலும் ஆட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

    ரோகித், ராகுல், கோலியில் யாரேனும் இருவர் டாப் ஆக ஆடவேண்டியுள்ளது, ஒருவர் நன்றாக ஆடி மற்ற இருவர் சொதப்பினாலும் இந்தியாவுக்கு சிக்கல்தான். இது நடக்கவில்லையெனில் இந்தியா கஷ்டம்தான். நாம் டாப் 3-தான் உலகின் சிறந்த டாப் 3. ரோகித் சர்மா டக் அவுட்., ராகுல் 3 ரன்களில் அவுட் என்பது அவர்களை ஒரேநாளில் மோசமான வீரர்கள் ஆக்கிவிடாது.

    இவர்கள் செம்ம வீரர்கள், அன்று நல்ல டெலிவரியில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து பவுலிங்கும் குறைவானது அல்ல. நாம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் ஆடவில்லை. ஷார்ஜாவில் ஆடினால் அவர்களும் நமக்கு கடும் சவால்களை அளிப்பார்கள். ஷார்ஜா பிட்சில் ஆப்கானிஸ்தான் பவுலிங்கும் பிரமாதமாகவே இருக்கும். ” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: