முகப்பு /செய்தி /விளையாட்டு / T20 World Cup 2021: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியப் பந்து வீச்சில் மாற்றம்- புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர்?

T20 World Cup 2021: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியப் பந்து வீச்சில் மாற்றம்- புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர்?

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையில் தோற்ற பிறகு ஒருவார கால இடைவெளியில் ஞாயிறன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி சந்திக்கிறது. இந்த இடைவெளி சகாயம் மற்ற அணிகளுக்கு கிடையாது, இந்திய அணிக்கு மட்டும் உண்டு. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பிய இந்திய அணியின் பந்து வீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யஜுவேந்திர செகல் மற்றும் குல்தீப் யாதவ் இந்தியாவின் குறைந்த ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் வெற்றிகரமாகத் திகழ்ந்தனர். 49 மேட்ச்களில் செகல் 63 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 23 மேட்ச்களில் 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் சேத்தன் சர்மா தலைமை அணித்தேர்வுக்குழு இவர்கள் இருவரையும் அனாவசியமாக உட்கார வைத்து வேடிக்கை பார்க்கிறது.

ஆனால் செகல் இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டி20 தொடரில் 1/44, 1/34 மற்றும் 1/41 என்று சிக்கன விகிதமும் 8.63 என்று சென்று விட்டார். பலவீனமான இலங்கைக்கு எதிராக 1/19 பார்மை வைத்து அவரை டி20 உலகக்கோப்பையில் எடுக்கக் கூடாது என்று அணித்தேர்வுக்குழு நினைத்திருக்கலாம். மாறாக 2017-ல் 7.66 என்ற சிக்கன விகிதத்துடன் 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் 2018-ல் 5.97 என்ற சிக்கன விகிதத்தில் 8 போட்டிகளில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் 2019, 2020, 2021 ஆகிய 3 சீசன்களில் 8 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் குல்தீப் யாதவ். இதனையடுத்து இவரும் அணித்தேர்வுக்குழுவின் நம்பிக்கையைப் பெறவில்லை. ஒருவேளை விராட் கோலி இவர்கள் இருவரையும் அதிகம் விரும்பியிருப்பார். ஆனால் அணித்தேர்வுக்குழு மும்பை லாபியில் ராகுல் சாகரைத் தேர்வு செய்தது. 4 ஆண்டுகளாக டி20 போட்டிகளிலேயே ஆடாத அஸ்வினை தேர்வு செய்தனர்.

இது கோலிக்குப் பிடிக்கவில்லை, அதனால்தான் முதல் மேட்சில் ஜடேஜாவையும் வருண் சக்ரவர்த்தியையும் அணியில் எடுத்து சாத்து வாங்கினார். எனவே அஸ்வின், சாகர் இருவரையும் நியூசிலாந்துக்கு எதிராக கொண்டு வர வேண்டும், ஆனால் கோலியின் ஈகோ அதற்கு சம்மதிக்குமா என்று தெரியவில்லை. நான் சொன்னதை மீறி அஸ்வினைத் தேர்வு செய்தீர்களா நான் அணியில் எடுக்காமல் உட்கார வைப்பேன் என்ற மனநிலையில் கோலி இருந்தால் மீண்டும் கடினம்தான்.

ஆனால் இன்னொரு மாற்றம் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கலாம் புவனேஷ்வர் குமார் உட்கார வைக்கப்பட்டு ஷர்துல் தாக்கூர் வருவார் என்று எதிர்பார்க்கலாம். பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஷ்வர் 3 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுக்க ஷமி 3.5 ஓவரில் 43 ரன்கள் விளாசப்பட்டார். கோலி இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் புதிய பந்தில் ஸ்ட்ரைக் பவுலர் பும்ராவுக்குக் கொடுக்க வேண்டும். முதலில் ஹர்திக் பாண்டியா என்ற மாயையிலிருந்து வெளியே வந்து அவர் காயமடைந்ததாக அறிவித்து வெங்கடேஷ் அய்யர் போன்ற ஆல்ரவுண்டரைச் சேர்க்க வேண்டும்.

Also Read: வார்னர் அதிரடி: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங் காம்பினேஷன் இப்படியிருக்கலாம்: பும்ரா, ஷர்துல் தாக்கூர், ராகுல் சாகர், அஸ்வின், ஜடேஜா, தேவைப்பட்டால் பாண்டியா வீசலாம் என்ற அளவுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

First published:

Tags: Shardul thakur, T20 World Cup