• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் உயிருக்கே ஆபத்து- ரிஸ்வானிடம் கூறிய நர்ஸ்

20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் உயிருக்கே ஆபத்து- ரிஸ்வானிடம் கூறிய நர்ஸ்

மருத்துவமனையில் ரிஸ்வான்

மருத்துவமனையில் ரிஸ்வான்

  • Share this:
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் நுரையீரல் மற்றும் மூச்சு விடுதல் பிரச்சனை காரணமாக மருத்துவமனை ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்று 20 நிமிடம் தாமதமாக அவர் போயிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று நர்ஸ் ஒருவர் ரிஸ்வானிடம் கூறியுள்ளார்.

    இந்தத் தகவலை முகமது ரிஸ்வான் பகிர்ந்துள்ளார். டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முகமது ரிஸ்வான் 67 ரன்கள் குவித்து மருத்துவமனை நினைவுகளை மறந்து தீரத்துடன் ஆடினார். முகம்மது ரிஸ்வானுக்கு சிகிச்சை அளித்தது ஒரு இந்திய மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிஸ்வான் ஆடுவதே சந்தேகமாகத்தான் இருந்தது. நுரையீரல் பிரச்சினையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி 52 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 67 ரன்களை எடுத்தார் ரிஸ்வான்.

    நாட்டிற்காக அற்பணிப்புடன் விளையாடிய முகமது ரிஸ்வானை கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வெகுவாக பாராட்டினர். இந்த நிகழ்வு குறித்து முகமது ரிஸ்வான் முதன்முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​​​என்னால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். இதுகுறித்து செவிலியர்களிடம் நான் கேட்டபோது முதலில் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் ஒரு செவிலியர் ஒருவர் என்னிடம், நீங்கள் 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் உங்கள் இரண்டு மூச்சுக்குழாய்களும் வெடித்திருக்கும் என்று கூறினார். இரண்டு நாள் சிகிச்சை முடிந்த பின் இயல்பாக செயல்பட முடிந்ததால் என்னால் அரையிறுதியில் விளையாட முடிந்தது என்றார்.

    அன்று பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியது, வார்னர் பிரமாதமாக ஆட முடிவில் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் முடித்து வைத்தனர், அதுவும் ஷாகின் ஷா அஃப்ரீடியை 3 சிக்சர்களை விளாசினார் வேட். ஆட்டம் 19வது ஓவரிலேயே முடிந்தது.  ஹசன் அலி கேட்சை விட்டார், அதற்காக அவரை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாகச் சாடினர். ஏனெனில் அவர் கேட்சை விட்ட அடுத்த 3 பந்துகள்தான் சிக்ஸ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: