T20 World Cup 2021: டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்- குரூப்களை அறிவித்த ஐசிசி

டி20 உ.கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்.

எமிரேட்சில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ள பிசிசிஐ நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான அணிப்பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்தியா, பாகிஸ்தான் 2ம் பிரிவில் உள்ளன, இதனால் இரு அணிகளும் மோதும் போட்டி இந்த முறை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

  • Share this:
    எமிரேட்சில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ள பிசிசிஐ நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான அணிப்பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்தியா, பாகிஸ்தான் 2ம் பிரிவில் உள்ளன, இதனால் இரு அணிகளும் மோதும் போட்டி இந்த முறை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    அதாவது 12 அணிகள் மோதும் பிரதான சுற்றில் இரண்டாம் பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் குரூப் பி வின்னர் அணியும் குரூப் ஏ ரன்னர் அணியும் இதே பிரிவில் இடம்பெறும்.

    குரூப் 1-ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் தகுதிச் சூற்றிலிருந்து தகுதி பெறும் குரூப் ஏ வின்னர் மற்றும் குரூப் பி ரன்னர் என்று இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    குதிச் சுற்றுகள் பிரிவில் குரூப் ஏ அணிகளாவன: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா.
    தகுதிச் சுற்று குரூப் பி-யில் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பபுவா நியுகினி, ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தகுதிச் சுற்றுப் போட்டிகளான முதல் சுற்றுப் போட்டிகள் யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன. சூப்பர் 12 பிரதானச் சுற்றுப் போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெறும். இவ்வாறு ஐசிசி அறிவித்துள்ளது.

    இதில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஒன்று நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறுகிறது ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: