• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Pak vs NZ| தோற்று இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்குமா அல்லது நியூசிலாந்தை பழிதீர்க்குமா?- பாகிஸ்தான் குறித்து ஆகாஷ் சோப்ரா

Pak vs NZ| தோற்று இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்குமா அல்லது நியூசிலாந்தை பழிதீர்க்குமா?- பாகிஸ்தான் குறித்து ஆகாஷ் சோப்ரா

பாபர அசாம்.

பாபர அசாம்.

  • Share this:
    இன்று இரவு 7:30 மணி போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் மோதுகின்றன, இதில் இந்திய அணியை மேலும் கஷ்டப்பட வைக்க நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோற்றுப்போகுமா அல்லது இருதரப்பு தொடரை ஆடாமல் புறக்கணித்து ஓடிய நியூசிலாந்து அணியை வென்று பாகிஸ்தான் பழிதீர்க்குமா? என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பதில் கூறியுள்ளார்.

    நாம் இன்று எழுதிய போது பாகிஸ்தான் இன்று வென்றால் இந்தியாவுக்கு அது சகாயம் செய்யும், மாறாக தோற்றால், இந்தியா பிறகு நியூசிலாந்தை வென்றால் 3 அணிகளும் மீதமுள்ள நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி நெட் ரன் ரேட்டில் மோத வேண்டும். இது பெருங்கஷ்டம், மாறாக பாகிஸ்தான் வென்றால் அது கிட்டத்தட்ட அரையிறுதியை உறுதி செய்த அணியாகி விடும். எனவே இன்று பாகிஸ்தான் வெல்வது இரட்டை லாபம் அந்த அணிக்கு. எப்படியெனில் அரையிறுதி இடத்தையும் உறுதி செய்து கொள்ளும், நியூசிலாந்து அணியை பழிதீர்த்தது போலவும் நிறைவு தரும்.

    இது தொடர்பாக நாம் கூறிய அதே கருத்தைத்தான் ஆகாஷ் சோப்ராவும் கூறியுள்ளார்: “நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி உதவிபுரியும் என்றே கருதுகிறேன். ஆனால் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி, நாம் நியூசிலாந்தை வீழ்த்தினால் ரன் ரேட்டில் மும்முனைப் போட்டியாகி விடும். மாறாக இன்று பாகிஸ்தான் வென்றால் இரு அணிகளுக்கு இடையே ஆப்கானிஸ்தான் மட்டுமே இருக்கும். எனவே பாகிஸ்தான் இன்று வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து எஞ்ஜாய் செய்ய வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு வந்து விட்டு கடைசி நேரத்தில் தொடரைப் புறக்கணித்த நியூசிலாந்து அணியை பழிக்குப் பழி வாங்க ஒரு பெரிய தோல்வியைப் பரிசாக அளிக்கவே பாகிஸ்தான் விரும்பும். எனவே பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு சில விஷயங்களை நிரூபிக்க வேண்டியுள்ளதாக நான் உணர்கிறேன். பாகிஸ்தான் அணி பிரமாதமாக ஆடிவருகின்றனர்.

    Also Read: T20 World Cup 2021: இன்று பாகிஸ்தானிடம் நியூசிலாந்து தோற்றால் இந்தியாவுக்கு நல்லது

    இந்த பிட்ச் உள்ளிட்டவை ஹபீஸ், ஷோயப் மாலிக்கிற்கு பொருத்தமாக உள்ளது. அவர்களும் நன்றாக வீசுகின்றனர், பாகிஸ்தான் அணி நல்ல வடிவத்தில் உள்ளது” என்றார் ஆகாஷ் சோப்ரா.

    ஷார்ஜா மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஒருவேளை இன்று பாகிஸ்தான் ஸ்பின்னுக்குச் சாதகமாக அமைக்கப்படுமோ என்னவோ தெரியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: