• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WC Final: ஆஸ்திரேலியாவின் அதிர்ஷ்டம்: நியூசிலாந்தின் முக்கிய வீரர் விலகல்

T20 WC Final: ஆஸ்திரேலியாவின் அதிர்ஷ்டம்: நியூசிலாந்தின் முக்கிய வீரர் விலகல்

டி20 உலகக்கோப்பையில் நியூசிக்கு பின்னடைவு

டி20 உலகக்கோப்பையில் நியூசிக்கு பின்னடைவு

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வலுவாகி அசத்தி வரும் ஆஸ்திரேலிய அணியை கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்து எதிர்கொள்கிறது, இந்நிலையில் முக்கிய வீரரும் விக்கெட் கீப்பிங் செய்தவருமான டெவன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியா தொடருக்கும் டெவன் கான்வே இல்லை.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வலுவாகி அசத்தி வரும் ஆஸ்திரேலிய அணியை கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்து எதிர்கொள்கிறது, இந்நிலையில் முக்கிய வீரரும் விக்கெட் கீப்பிங் செய்தவருமான டெவன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியா தொடருக்கும் டெவன் கான்வே இல்லை.

    இங்கிலாந்து அணியை அன்று டேரல் மிட்செல், டெவன் கான்வே கூட்டணியும் பிறகு ஜேம்ஸ் நீஷமின் காட்டடியும் வீழ்த்த இறுதிக்குள் நியூசிலாந்து நுழைந்தது, நேற்று பாகிஸ்தான் அணியை டேவிட் வார்னர், பிறகு ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் பதம் பார்த்தனர். இதனால் இறுதியில் நியூசிலாந்தை சந்திக்கிறது ஆஸ்திரேலியா. இந்நிலையில் அரையிறுதியில் நியூசிலாந்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த டெவன் கான்வே காயம் காரணமாக விலகியிருப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் ஞாயிறன்று ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. 167 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு எதிராக சேஸ் செய்த போது டெவன் கான்வே 38 பந்துகளில் 46 ரன்கள் என்று ஒரு ஜாவேத் மியாண்டட் இன்னிங்ஸை ஆடினார். அன்று அவுட் ஆகும் போது அவர் கையில் காயம் ஏற்பட்டது, வலது கையில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

    இதனையடுத்து அவர் இந்திய தொடரிலிருந்தும் விலகுகிறார், இது ஒரு பெரிய பின்னடைவு ஏனெனில், இங்கிலாந்துக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்தில் இரட்டைச்சதம் எடுத்து அசைக்க முடியா வீரராக இருந்தார், அவரை வீழ்த்துவது மிகமிகக் கடினம். ஒரு ஆல்ரவுண்ட் வீரர், விக்கெட் கீப்பிங்கிலும் பயன்படுத்திக் கொள்ளலாம், ஒரு இருமடங்கு ராகுல் ஆவார் இவர்.

    இத்தகைய வீரரை இறுதிப்போட்டிக்கு முன்பும் இந்தியா தொடரிலும் நியூசிலாந்து அணி காயத்துக்குப் பறிகொடுத்தது பெரும் பின்னடைவே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: