• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021 Final: வில்லியம்சன் 48 பந்தில் 85, மற்றவர்கள் 73 பந்துகளில் 78 மட்டுமே: நியூசிலாந்து தோல்விக்குக் காரணம்

T20 World Cup 2021 Final: வில்லியம்சன் 48 பந்தில் 85, மற்றவர்கள் 73 பந்துகளில் 78 மட்டுமே: நியூசிலாந்து தோல்விக்குக் காரணம்

வில்லியம்சன்.

வில்லியம்சன்.

கேன் வில்லியம்சன் இறங்கி மார்ஷை பவுண்டரி அடிக்கும் வரை 32 பந்துகள் பவுண்டரியே நியூசிலாந்துக்கு வரவில்லை. ஹேசில்வுட் அபாரமாக வீசியதும் ஒரு காரணம், அவரது கட்டர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆடம் ஜாம்ப்பாவுக்கு இது ஒரு அருமையான தொடர்.

  • Share this:
டி20 உலகக்கோப்பை தொடர்களிலேயே இந்த யுஏஇ 2021 டி20 உலகக்கோப்பைதான் குறைந்த ஸ்கோரிலான டி20 போட்டிகள் அதிகம் இருந்த போட்டியாக இருக்கலாம். ஆனால் இறுதிப் போட்டியில் பிட்ச் பரவாயில்லை ரகம், இதனால் இரு அணிகளுமே நல்ல ஸ்கோரிங் செய்ய முடிந்தது, இதில் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் தவிர மற்றவர்கள் ஒன்றுமில்லாமல் போனதுதான் அந்த அணியின் தோல்விக்குக் காரணம்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மிகச்சரியாக நியூசிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது, நியூசிலாந்து அணி ஸ்டெடியாகவே தொடங்கியது. முதல் 10 ஓவர்களில் 57/1 என்று மிகவும் மந்தமாக ஆடியதே தோல்விக்குக் காரணம், அரையிறுதியில் அன்று பாகிஸ்தான் 10 ஓவர்களில் 71/1 என்பதே போதாது போன பின்பு 57 ரன்கள் என்பது எம்மாத்திரம். இந்த இடத்தில்தான் 3 விக்கெட் போனாலும் பரவாயில்லை 90 ரன்கள் என்றிருந்தால் நியூசிலாந்து அணி ஒரு ஃபைட் கொடுத்திருக்க முடியும்.

கேன் வில்லியம்சன் இறங்கி மார்ஷை பவுண்டரி அடிக்கும் வரை 32 பந்துகள் பவுண்டரியே நியூசிலாந்துக்கு வரவில்லை. ஹேசில்வுட் அபாரமாக வீசியதும் ஒரு காரணம், அவரது கட்டர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆடம் ஜாம்ப்பாவுக்கு இது ஒரு அருமையான தொடர். இந்தப் போட்டியிலும் தான் யார் என்பதை நிரூபித்து 26/1 என்று அற்புதமாக வீசினார். ஹேசில்வுட் 4 ஓவர் 16 ரன்3 விக்கெட்.

7வது ஓவரில் மேக்ஸ்வெல் 5 சிங்கிள்களை மட்டுமே கொடுத்தார். அட்டாக்கிங் பிளேயரான மார்டின் கப்டில் 35 பந்துகளில் 28 ரன்களையே எடுத்தார். ஹேசில்வுட், கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை பவுண்டரியிலிருந்து அதிக தூரம் உள்ளே வந்ததால் விட வேண்டியதாயிற்று, இதையும் பிடித்திருந்தால் நியூசிலாந்து கதி அதோகதிதான், ஆனால் ஹசன் அலி போல் கேட்சும் போச்சு மேட்சும் போச்சு என்ற நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படவில்லை.

கேட்சை விட்டதினால் கடைசியில் மிட்செல் ஸ்டார்க் கேன் வில்லியம்சனிடம் சரியாகச் சிக்கினார், 16வது ஓவரில் 4, 4, 6, 0, 4, 4 என்று வெளுத்து வாங்கினார் வில்லியம்சன். 12 பந்துகளில் மிட்செல் ஸ்டார்க்கை 39 ரன்கள் விளாசி ஒரேபவுலரை வெளுத்து வாங்கியதில் சாதனை படைத்தார். களவியூகமும் மோசமாக இருந்தது தேர்ட்மேன், பாயிண்ட் இரண்டுமே சர்க்கிளுக்குள் வைத்துக் கொண்டு ஓவர் த விக்கெட்டில் ஸ்டார்க் வீசினால் வில்லியம்சனுக்குத் தெரியாதா, எட்ஜ் எடுதாலே பவுண்டரி என்று!!

Also Read: நாங்க சொத்தை டீமா? சொல்லி வைத்து டி20 உலகக்கோப்பையை வென்றோம்- மேத்யூ வேட்
 வில்லியம்சன் 58 பந்துகளில் 85 ரன்கள் சாத்தி எடுக்க, மற்ற நியூசிலாந்து வீரர்கள் சேர்ந்து அனைவரும் 73 பந்துகளில் 78 ரன்களை எடுத்தனர், இதுதான் தோல்விக்குக் காரணம், முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து 57 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியாவோ 82 ரன்கள் விளாசியது, இந்த தருணத்திலேயே மேட்ச் நியூசிலாந்துக்கு முடிந்து விட்டது.



 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: