• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • நாங்க சொத்தை டீமா? சொல்லி வைத்து டி20 உலகக்கோப்பையை வென்றோம்- மேத்யூ வேட்

நாங்க சொத்தை டீமா? சொல்லி வைத்து டி20 உலகக்கோப்பையை வென்றோம்- மேத்யூ வேட்

டி20 உலகசாம்பியன் அஸ்திரேலியா

டி20 உலகசாம்பியன் அஸ்திரேலியா

டி20 உலகக்கோப்பை 2021 தொடரில் சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா அணி முதன் முதலில் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. தங்கள் அணியை முதலில் யாரும் மதிக்கவே இல்லை, ஆனால் நாங்கள் எங்களுக்குள் பேசி வைத்து ஜெயித்தோம் என்று கூறுகிறார் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்.

 • Share this:
  டி20 உலக்கக்கோப்பைக்கு முன்னால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேச அணிகளிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா, முதன் முதலாக உலகக்கோப்பை டி20-யை கைப்பற்றியது குறித்து அந்த அணி வீரர்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்:

  மிட்செல் மார்ஷ் (ஆட்ட நாயகன்)- என்னிடம் என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த அணிக்கு அபாரமான 6 வார காலம் அமைந்தது. பயிற்சியாளர்கள் என்னிடம் வந்து நான் 3ம் நிலையில் இந்த தொடர் முழுதும் இறங்குவேன் என்றார்கள். இந்த வாய்ப்பை பாய்ந்து பற்றிக் கொண்டேன். முதல் பந்தே சிக்ஸ் அடித்தது குறித்து முன் கூட்டியே சிந்தனை எல்லாம் ஒன்றும் இல்லை. போய் அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன், இன்று அமைந்தது.

  தொடர்நாயகன் டேவிட் வார்னர்: என்னைப்பொறுத்தவரையில் அடிப்படைகளுக்கு திரும்புவது தான் முக்கியம் என்று கருதுகிறேன். செயற்கை பிட்சில் போய் சிலபல் பந்துகளை பயிற்சியில் அடித்து ஆடினேன். 2015 உலகக்கோப்பையை வென்ற அனைத்து உற்சாகமும், இதை வென்றதிலும் உள்ளது. இப்போதுள்ள வீரர்கள் பிரமாதம். உதவிப்பணிக்குழுவினரும் அபாரமானவர்கள். அனைவருக்கும் ஒரு காட்சிப்படுத்தலை நிகழ்த்த விரும்பினேன். மீண்டு எழுந்து கோப்பையை வென்றது பெருமகிழ்ச்சி.

  ஜஸ்டின் லாங்கார் - ஆஸி. பயிற்சியாளர்: அனைவரும் உலகக்கோப்பையை வெல்வது கடினமான நடைமுறை என்பார்கள். ஆனால் இந்த அணி பிரமாதமான அணி. சில அபாரமான கிரிக்கெட் வீரர்கள் இங்கு உள்ளனர். கடந்த 12 மாதங்களாக பல்வேறு காரணங்களினால் இணைந்து ஆட முடியவில்லை. மீண்டும் இணைந்தபோது இது ஒரு நீண்ட கால பிரிவுக்குப் பிறகான மறு சேர்க்கை போன்று இருந்தது. இந்த அணியில் பெரிய திறமைகள் உள்ளன.

  மேத்யூ வேட்: எங்களை நிறைய பேர் தொடருக்கு முன்பாக பரிசீலிக்கவே இல்லை, சொத்தை அணி என்றே நினைத்தனர். ஆனால் உள்ளுக்குள் நாங்கள் சொல்லி வைத்துக் கொண்டோம் நாம்தான் டி20 உலகக்கோப்பையை வெல்லும் முதல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் என்று சபதம் எடுத்தோம். பாகிஸ்தானுக்கு எதிராக அரையிறுதியில் என்னுடைய இன்னிங்சை விட ஸ்டாய்னிஸ் உடன் அமைத்த கூட்டணிதான் மிக மிக முக்கியம். இன்று நம்பிக்கையுடன் தான் இருந்தோம் நல்ல தொடக்கம் கிடைத்தால் நிச்சயம் வெல்வோம் என்றே கருதினோம். இன்று வார்னர், மிட்செல், மேக்ஸ்வெல் செய்து முடித்தனர்.

  ஏரோன் பிஞ்ச்: இது மிகப்பெரியது, முதன் முதலாக இந்த அணிதான் ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்றது என்பது நம்பமுடியாதது. தனிப்பட்ட ஆட்டமும் பிரமாதம், அணியாகவும் ஆடியது பிரமாதம். டேவிட் வார்னர் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்றெல்லாம் எப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. இப்போதுதான் அவர் பெரிய கிரிக்கெட்டை ஆடிவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: