• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 worldcup: டி20 உலகக் கோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணியை ஊதித் தள்ளிய இங்கிலாந்து!

T20 worldcup: டி20 உலகக் கோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணியை ஊதித் தள்ளிய இங்கிலாந்து!

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து

இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முக்கிய வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். அதிரடி ஆட்டக்காரர் கிறில் கெய்ல் மட்டுமே இரட்டை இலக்கத்தில் (13 ரன்கள்) ரன் எடுத்தார்.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்டி இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அடுத்த ஆடிய இங்கிலாந்து 8.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் சுற்று முடிவில்  சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் ஒன்றில்  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    இதில், இன்று இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதிய ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முக்கிய வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். அதிரடி ஆட்டக்காரர் கிறில் கெய்ல் மட்டுமே இரட்டை இலக்கத்தில் (13 ரன்கள்) ரன் எடுத்தார்.

    14.2 ஓவர்களின் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்களை மட்டுமே எடுத்தது. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சாளர் அடில் ரஷீத்  2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மொயீன் அலி, டிமால் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய்,  ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜேசன் ராய் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்களிலும் மொய்ன் அலி 3 ரன்களிலும்  லியாம் லிவிங்ஸ்டோன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். 8.2 ஓவர்களில்4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை எடுத்து இங்கிலாந்து வெற்றிபெற்றது. நிலைத்து நின்று ஆடிய ஜோஸ் பட்லர் 24 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழங்காமல் இருந்தார்.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் போட்டிக்கு முன் பிசிசிஐ அதிரடி முடிவு... 4 வீரர்கள் நாடு திரும்பினர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: