• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இங்கிலாந்து கடித்துத் துப்பியதா, நியூசிலாந்து மென்று துப்பியதா?- ஆகாஷ் சோப்ரா பிரமிப்பு

இங்கிலாந்து கடித்துத் துப்பியதா, நியூசிலாந்து மென்று துப்பியதா?- ஆகாஷ் சோப்ரா பிரமிப்பு

ஆகாட்ஷ் சோப்ரா

ஆகாட்ஷ் சோப்ரா

த்ரில்லிங் அரையிறுதிக்கு அடுத்ததாக இன்று இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டும். 2 அருமையான போட்டிகள் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.

  • Share this:
    உள்ளபடியே கூறுகிறேன் நியூசிலாந்து அணி கன் டீமெல்லாம் இல்லை, இங்கிலாந்து அரையிறுதியில் நியூசிலாந்தை கடித்துத் துப்பி விடும் என்று பேசிய ஆகாஷ் சோப்ரா மன்னிப்புக் கேட்கும் தொனியில் நியூசிலாந்தின் டி20 உலகக்கோப்பை அரையிறுதி வெற்றியை பெரிதும் விதந்தோதி தன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக நவம்பர் 8ம் தேதி ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் கூறும்போது, “நியூசிலாந்து அணி என்பது 5 விரல்கள் சேர்ந்த முஷ்டி அவ்வளவுதான், கன் டீமெல்லாம் அல்ல. உள்ளபடியே கூறுகிறேன், நியூசிலாந்து பேட்டிங் வலுவானது அல்ல. இப்போது அரையிறுதியில் நியூசிலாந்து நுழைந்து இங்கிலாந்தை எதிர்கொள்கிறதென்றால் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை நன்றாக மென்று, கடித்துத் துப்பி விடும். இங்கிலாந்து அவர்களை சும்மா விடமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து அணி கட்டுக்கோப்பான அணி என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்”, என்றார்.

    ஆனால் நேற்று நியூசிலாந்து அணி இங்கிலாந்தை மென்று துப்பியது, மிகவும் தொழில் நேர்த்தியான ஆட்டத்தை ஆடியது, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது, கோப்பையை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனெனில் அந்த அணியிடம் அத்தனை உறுதி கண்களில் தெரிகிறது.

    இந்நிலையில் அன்று நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட்ட ஆகாஷ் சோப்ரா, நேற்று நியூசிலாந்தின் வெற்றியைக் கண்டு உண்மையில் பிரமித்திருப்பார், ஆனால் பிரமிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் அந்த அணியை பாராட்டும் போது, நியூசிலாந்து அணி வார்த்தைகளில் பேசாது, செயல்தான் அதன் வார்த்தை என்று பாராட்டியுள்ளார்.

    “செயல்களே வார்த்தைகள். இதற்கு நியூசிலாந்துதான் சிறந்த உதாரணம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வின்னர்கள். 50 ஓவர் 20 ஓவர் உலகக்கோப்பைகளின் இறுதிப் போட்டியாளர்கள். அதாவது கடந்த ஐசிசி தொடர்கள். ஒரே ஆண்டில் 2 ஐசிசி கோப்பைகள் என்று நியூசிலாந்து அணி சாதிக்க வாய்ப்பு. பெரிய மரியாதை” என்று ஆகாஷ் சோப்ரா அப்படியே அந்தர்பல்டி அடித்து புகழ்ந்துள்ளார்.

    Also Read: Eng vs NZ| டி20 உலகக்கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டம்- நியூசிலாந்தின் செமிபைனல் வெற்றியை புகழ்ந்து தள்ளிய சேவாக்

    த்ரில்லிங் அரையிறுதிக்கு அடுத்ததாக இன்று இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டும். 2 அருமையான போட்டிகள் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: