• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup: டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கி விடாதீர்கள்: ஷேன் வார்ன் எச்சரிக்கை

T20 World Cup: டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கி விடாதீர்கள்: ஷேன் வார்ன் எச்சரிக்கை

டேவிட் வார்னர்.

டேவிட் வார்னர்.

மோசமான பார்மில் இருக்கும் டேவிட் வார்னரை எந்தக் காரணத்தை முன்னிட்டும் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இந்த போட்டியின் சூப்பர் 12 சுற்று நாளை, 23ம் தேதி முதல் தொடங்குகிறது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், சமீப காலமாக நடந்த ஆட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 0, 2 என ரன்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி-20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களிலும் அவரது மோசமாக ஆட்டம் தொடர்ந்தது.

    இந்த நிலையில் டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் குறித்து அவர் கூறுகையில், “டேவிட் வார்னர் மிகத்திறமையான வீரர். சமீபத்தில் அவர் சரியாக விளையாடவில்லை, நிறைய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்களில் ஒருவர்.

    திறமை தான் நிரந்தரம். வார்னர் விஷயத்தில் இதுதான் சரி. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிடக் கூடாது. முதல் இரு ஆட்டங்கள் முக்கியமானவை. அவர் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் டி-20 உலகக் கோப்பை போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார். சமீபமாக அவர் சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான்.

    தொடருக்கு வருவதற்கு முன் அதிகம் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கவில்லை, எனவே அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். பழைய பழமொழிதான் ஆனால் இப்போதும் அது சிறந்ததே, ‘தரம் நிரந்தரம், பார்ம் தற்காலிகமானதுதான், அவர் மட்டும் ஆட ஆரம்பித்து விட்டால் சரவெடிதான். அவர் நிச்சயம் பார்முக்கு வந்து வெளுத்து வாங்கத்தான் போகிறார்” என்றார் டேவிட் வார்னர்.

    டி20 உலகக்கோப்பை முதல் போட்டியில் 23ம் தேதி அபுதாபியில் இந்திய நேரம் மதியம் 3,30 மணியளவில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    அக்டோபர் 23இல் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: