• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2007 டி20 உலகக்கோப்பை சாம்பியன் தோனி படை இப்போது என்ன பேசிக்கொள்கின்றனர்? அட! விராட் கோலி பெயரை யாருமே சொல்லலையா?

2007 டி20 உலகக்கோப்பை சாம்பியன் தோனி படை இப்போது என்ன பேசிக்கொள்கின்றனர்? அட! விராட் கோலி பெயரை யாருமே சொல்லலையா?

2007 டி20 உலக சாம்பியன் ஹீரோக்கள் கருத்துகள்.

2007 டி20 உலக சாம்பியன் ஹீரோக்கள் கருத்துகள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோவான கிளாஸ் ஆஃப் 2007 நிகழ்ச்சியில் 2007 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்ற போது அப்போதைய ஹீரோக்கள் இப்போது என்ன பேசிக்கொள்கின்றனர் என்பது பற்றிய சுவாரசியமான நிகழ்வு நடத்தப்பட்டது.

  • Share this:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் இர்பான் பதான், கம்பீர், ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், ஆர்.பி. சிங் அஜித் அகார்கர், ஆகியோர் 2021 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் கணிக்க முடியாத அந்த வெற்றியாளர், அதாவது எக்ஸ்-ஃபாக்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த வீரர் யாராக இருப்பார் என்று சுவாரசிய விவாதம் மேற்கொண்டனர். சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    விவாதத்தில் இர்பான் பதான், 2007 டி20 உலகக்கோப்பையின் போது இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பில்லை மாறாக இப்போது பெரிய எதிர்பார்ப்பிருக்கிறது என்று சொன்னார், இதனை ஏற்றுக் கொண்ட தினேஷ் கார்த்திக், “நான் இர்பான் பதான் சொன்னதை முழுதும் ஏற்கிறேன். அப்போது அழுத்தத்தை கையாள்வது என்பது வேறு ஒரு விஷயம். ஆனால் அப்போதை விட ஐபிஎல் அனுபவம் வீரர்களுக்கு நிச்சயம் அழுத்தத்தை நீக்க பெரிய அளவில் உதவும். எனவே அழுத்தம் என்பது இப்போது அதிகம் ஆனால் அதை கையாள்வதிலும் பிரச்சனை இல்லை ஏனெனில் ஏகப்பட்ட ஐபிஎல் நெருக்கமான போட்டிகள் அவர்கள் பின்புலத்தில் உள்ளது” என்றார்.

    எக்ஸ் ஃபாக்டர் என்பது கணிக்க முடியாத ஒரு வீரர் திடீரென பெரிய ஆளாகி டி20 கோப்பையையே வெல்லும் அளவுக்கு பெர்பாமன்ஸ் கொடுப்பார் அப்படிப்பட்ட வீரர் இந்திய அணியில் யாராக இருக்க முடியும் என்ற விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீரரை, அல்லது 2 வீரர்களின் பெயரைக் குறிப்பிட்டனர்.

    கவுதம் கம்பீர் : அது பும்ராதான் என்றார்.

    ஹர்பஜன் சிங்: ஒருவரைத்தான் குறிப்பிட வேண்டுமென்றால் அது ரோகித் சர்மாதான், ரோகித் சர்மா தான் அந்த எக்ஸ் பாக்டர் என்று நான் நினைக்கிறேன்.

    தினேஷ் கார்த்திக்: நான் ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி மீது பந்தயமே கட்டுகிறேன். இந்த உலகக்கோப்பையில் இவர்கள் இருவரும்தான் வித்தியாசம் காட்டப்போகிறார்கள்.

    அஜித் அகார்கர்: ஜஸ்பிரித் பும்ரா, ரோகித் சர்மா இருவரும் முக்கிய பங்களிப்பு செய்வார்கள். ஓப்பனிங்கில் ரோகித் சர்மா, பும்ரா இதுவரை என்ன செய்தாரோ அதை வைத்து மிக முக்கியமான பங்களிப்பார்.

    ஆர்.பி.சிங்: என்னுடைய எக்ஸ் பாக்டர் வீரர் ஜஸ்பிரித் பும்ரா.

    இர்பான் பத்தான்: ஜஸ்பிரித் பும்ரா, அவருக்கு எதிர் முனையில் வீசக்கூடியவர், அதாவது கடைசி 2 ஓவர்களை வீசுபவர்கள்தான் முக்கியம் என்கிறேன்.

    இவ்வாறாக சுவாரஸ்யங்களை 2007 டி20 உலகக்கோப்பை ஹீரோக்கள் பகிர்ந்து கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: