ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலி, பாபர் அசாம் எங்க கிட்ட மோதாதீங்க- ஸ்காட்லாந்து ஸ்பின்னர் சவால்

விராட் கோலி, பாபர் அசாம் எங்க கிட்ட மோதாதீங்க- ஸ்காட்லாந்து ஸ்பின்னர் சவால்

கோலிக்கு சவால் விடுகிறார் ஸ்காட்லாந்து ஸ்பின்னர் மார்க் வாட்

கோலிக்கு சவால் விடுகிறார் ஸ்காட்லாந்து ஸ்பின்னர் மார்க் வாட்

ஸ்காட்லாந்தின் இடது கை ஸ்பின்னர் மார்க் வாட் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார், தனக்கு விராட் கோலியும் பயமில்லை, பாபர் அசாமும் பயமில்லை என் கிட்ட மோதாதீங்க என்று இந்தியா, பாகிஸ்தான் கேப்டன்களுக்குச் சவால் விடுத்துள்ளார்.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்று, அதிலும் வங்கதேசத்தையும் வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்குத் தகுதி பெற்ற ஸ்காட்லாந்து அணி பெரிய மூடில் உள்ளது, உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது. உலகக்கோப்பைகளில் பெரிய பெரிய அதிர்ச்சித் தோல்விகள் நடந்துள்ளன இங்கிலாந்து இருமுறை நெதர்லாந்திடம் டி20 உலகக்கோப்பையில் தோற்றுள்ளது, ஆஸ்திரேலியா அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வி கண்டது. இருமுறை உலக டி20 சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிடம் தோற்றுள்ளது.

  இந்த முறையும் ஓரிரு அதிர்ச்சித் தோல்விகளை வழங்க அசோசியேட் அணிகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன. இதில் குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுடன் எச்சரிக்கையாக ஆடுவது நல்லது என்றே பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ள பிரிவில் ஸ்காட்லாந்து இணைந்ததையடுத்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு ஸ்காட்லாந்து ஸ்பின்னர் மார்க் வாட் சவால் விடுத்துள்ளார்.

  அவர் கூறும்போது, “நாங்கள் சிலபல அதிர்ச்சித் தோல்விகளை டாப் அணிகளுக்கு அளிப்போம். ஏன் நாங்கள் அளிக்க முடியாது? நாங்கள் இதற்கு முன்பாகவும் சிலபல அதிர்ச்சித் தோல்விகளை சில டாப் அணிகளுக்கு அளித்துள்ளோம். சிறந்த ஒருநாள் அணியை தோற்கடித்துள்ளோம். பங்களாதேஷை இப்போது தோற்கடித்தோம். இப்போது நல்ல பார்மில்தான் இருக்கிறோம்.

  ஆம்! அணிகள் எங்களை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். ஸ்காட்லாந்தை நினைத்து அவர்கள் பயப்பட வேண்டும். ஆம் எங்களிடம் ஏகப்பட்ட உத்வேகம் உள்ளது. விராட் கோலி தலைமை இந்தியா, பாபர் அசாம் தலைமை பாகிஸ்தான், கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்து அணிகள் குறித்து கவலையில்லை, பயமில்லை. இவர்கள் உலகின் தலைசிறந்த வீரர்கள் அந்த அணிகள் தலை சிறந்த அணிகள்.

  இந்த சிறந்த அணிகளுடன் பெரிய அளவில் மோத வீரர்கள் உற்சாகம் கரைபுரண்டோடக் காத்திருக்கின்றனர். நம்மை நாமே சவாலுக்கு கொண்டு செல்ல உலகக்கோப்பைதான் சிறந்த தருணம்.

  இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பையில் கலக்கிய இந்திய பவுலர்கள் யார் யார்?

  நாங்கள் வித்தியாசமாக எதையும் செய்ய விரும்பவில்லை, 3 போட்டிகளில் மூன்றிலும் வென்றுள்ளோம். பங்களாதேஷை தோற்கடித்தோம். நாங்கள் எதையும் மாற்றத் தேவையில்லை பங்களாதேஷ்தான் மாற்ற வேண்டும். அசோசியேட் கிரிக்கெட் மிகவும் கடினம், எனவே நாங்கள் என்ன செய்தோமோ அதையே மீண்டும் செய்வோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று திட்டவட்டமாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  Also Read: T20 World Cup 2021 India vs Pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய லெவன் என்ன? அஸ்வின் இல்லை?

  Published by:Muthukumar
  First published:

  Tags: Babar Azam, Kane Williamson, T20 World Cup, Virat Kohli