ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

6 மாதங்களுக்கு இடைவிடா பயணம், பயோபபுள் என்றால் எப்படி?- தோல்வி ஏன்?- உண்மையைச் சொன்ன பாரத் அருண்

6 மாதங்களுக்கு இடைவிடா பயணம், பயோபபுள் என்றால் எப்படி?- தோல்வி ஏன்?- உண்மையைச் சொன்ன பாரத் அருண்

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண்.

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  யுஏஇயில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா இன்று நமீபியாவுடன் மோதுகிறது, ஒரு பிரயோசனமும் இல்லாத இந்த ஆட்டம் விராட் கோலி, ரவிசாஸ்திரி செண்ட் ஆஃப் ஆட்டம் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் இல்லை. இந்நிலையில் இந்திய பவுலிங் கோச் பாரத் அருண் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை தன் பார்வையில் முன் வைத்துள்ளார்.

  டாஸ் ஒரு பெரிய காரணியாக உள்ளது என்று கூறும் பாரத் அருண், 6 மாதகாலமாக பயோபபுள், பயணம், ஐபிஎல் போட்டிகள் என்று வீரர்கள் மனரீதியாக கடும் களைப்படைந்துள்ளனர் என்ற காரணங்களைக் கூறியுள்ளார் பாரத் அருண். டி20 உலகக்கோப்பை தொடரில் யுஏஇ-யில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் செம உதை வாங்கி இந்திய அணி வெறுங்கையுடன் திரும்பவுள்ளது.

  இது தொடர்பாக பாரத் அருண் கூறியது: “ரோடிலேயே 6 மாத கால பயணம் என்பது பெரிய டாஸ்க்தான். பெரிய பணிச்சுமைதான். வீரர்கள் வீட்டுக்குச் செல்லவில்லை. கடந்த ஐபிஎல்-க்குப் பிறகான ஒரு சிறிய இடைவெளியும் இல்லை. பயோ பபுள் என்ற கொரோனா பாதுகாப்பு வலையத்துக்குள் வீரர்கள் 6 மாத காலம் இருந்தது அவர்கள் உடல்/மன வலிமையை இழக்கச் செய்து விட்டது. உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமெனில் ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஒரு சிறிய இடைவேளை கிடைத்திருந்தால் கூட வீரர்களுக்கு அது சவுகரியமாகவே இருக்கும்.

  இங்கு டாஸ் என்பது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. டாஸ் எப்படி தீர்மானிக்க முடியும்? டாஸில் வெல்லும் அணிகளுக்கு நியாயமற்ற முறையில் சாதகங்கள் அமைந்து விடுகின்றன. முதல் இன்னிங்ஸில் பேட் செய்வதற்கும் 2வதாக பேட் செய்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. குறுகிய வடிவங்களில் டாஸா வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது?

  Also Read: T20 Worldcup| நியூசிலாந்துன்னா சும்மா இல்லை; தொடர்ச்சியாக 4வது உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி

  யஜுவேந்திர செகல் அணியில் இருப்பதும் இல்லாததும் தேர்வாளர்கள் கையில் இருக்கிறது, அவர் இருந்திருந்தால் என்றெல்லாம் நான் சிந்திக்க தலைப்பட மாட்டேன். என்ன அணி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை வைத்துக் கொண்டுதான் ஆட வேண்டும்” என்றார் பாரத் அருண்.

  Also Read: T20 Worldcup 2021| இந்திய அணி வெளியேற்றம்: மீம்கள் போட்டு கலாய்த்த சேவாக், ஜாஃபர்

  பாரத் அருண் கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. வர்த்தக லாபங்களுக்காக வீரர்கள் அதிகப் பணிச்சுமையினால் அவதியுறுகின்றனர் என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. ஆனால் இதுவும் கூட அனைத்து அணிகளுக்கும் பொருந்தும் தானே?

  Published by:Muthukumar
  First published:

  Tags: T20 World Cup, Team India