• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணிக்குப் பிறகு ஆஸ்திரேலியா பெரிய சவால்: மேத்யூ ஹைடன்

இந்திய அணிக்குப் பிறகு ஆஸ்திரேலியா பெரிய சவால்: மேத்யூ ஹைடன்

பாக் பேட்டிங் கோச் ஹெய்டன் மற்றும் ஆஸி கோச் லாங்கர்.

பாக் பேட்டிங் கோச் ஹெய்டன் மற்றும் ஆஸி கோச் லாங்கர்.

அன்று பரம தோஸ்த், இன்று பரம வைரிகள், என்ற நிலை உணர்ச்சிப்பூர்வமானது, சவாலானது என்கிறார் மேட் ஹைடன்.

  • Share this:
    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் துபாயில் மோதுகின்றன. ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும், இப்போது பாகிஸ்தான் பேட்டிங் ஆலோசகராக இருக்கும் மேத்யூ ஹெய்டனும் பல போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

    அன்று பரம தோஸ்த், இன்று பரம வைரிகள், என்ற நிலை உணர்ச்சிப்பூர்வமானது, சவாலானது என்கிறார் மேட் ஹைடன். இந்நிலையில் மேட் ஹைடன் கூறியதாவது, “ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் போர்க்குணமிக்க வீரராக நான் 20 ஆண்டுகள் இருந்துள்ளேன். இது ஆஸ்திரேலிய வீரர்களின் குணாதிசியம், அவர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளும் சாதகத்தை எனக்கு தந்திருக்கிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கலாசாரத்தையும் அறிவேன்.

    என்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது உணர்வுபூர்வமாகவும், மனதளவிலும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் அற்புதமான பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நானும் பங்கெடுத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    இந்த உலக கோப்பையில் முதல் ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் உச்சக்கட்டம். வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி இருந்தது. அந்த நெருக்கடி ஆஷஸ் போட்டிக்கு நிகரானது. அப்படிப்பட்ட சூழலை பாகிஸ்தான் வீரர்கள் பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் திறம்பட கையாண்டனர். அந்த வெற்றி தான் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய ஷகீன் ஷா அப்ரிடி வீசிய அந்த பந்து, நான் பார்த்தமட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சில் ஒன்றாகும்” என்று கூறியுள்ளார் ஹைடன்.

    இன்று துபாயில் இரவு 7:30 மணியளவில் இந்த உலகக்கோப்பை டி20 அரையிறுதி நடைபெறுகிறது. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் வருமாறு:

    பாகிஸ்தான் அணி உத்தேச லெவன்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பகர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹின் அப்ரீட், ஹாரிஸ் ராவுஃப்.

    ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டேவிட் வார்னர், ஏரோன் பிஞ்ச், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், வேட், கமின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்ப்பா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: