• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை: சிக்சர்கள், பவுண்டரிகள் மூலம் இந்தியா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆப்கான்

டி20 உலகக்கோப்பை: சிக்சர்கள், பவுண்டரிகள் மூலம் இந்தியா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆப்கான்

ஆப்கான் அதிரடி வீரர் நஜிபுல்லா சத்ரான்.

ஆப்கான் அதிரடி வீரர் நஜிபுல்லா சத்ரான்.

  • Share this:
    ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை 2021, பிரிவு 2- போட்டியில் ஸ்காட்லாந்தை ஆப்கானிஸ்தான் அணி ஊதி வெற்றி பெற்ற விதம் உண்மையில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பிரிவு 2-ல் உள்ள மற்ற அணிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான். 130 ரன்கள் வித்தியாசத்தில் ஸகாட்லாந்தை ஊதியது என்றால் அதன் நெட் ரன் ரேட் மற்ற அணிகளை விட உச்சத்தில் இருக்கும்.

    இந்தியாவின் நெட் ரன்ரேட் மைனஸ் 0.973ம் ஆப்கான் அணியின் நெட் ரன் ரேட் நேற்றைய பெரிய வெற்றிக்குப்பிறகு 6.500 ஆகும். பாகிஸ்தான் அணி 0.973 என்று 2ம் இடத்தில் உள்ளது. இது சாதாரணமல்ல. ஆப்கானிஸ்தான் அணி எந்த அணிக்கும் அதிர்ச்சியளிக்கும் அபாயகரமான அணி என்பதி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

    நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக, 190/4 என்று ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அதில் 13 பவுண்டரிகள் 11 சிக்சர்களை விளாசியது. கிட்டத்தட்ட 18 ரன்களை 24 பந்துகளில் அடித்துள்ளது என்றே கூற வேண்டும். மேலும் ரஷீத் கான் நேற்று பவுலிங் வீச வரும்போதே ஸ்காட்லாந்து 37/5 என்று இருந்தது, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் முஜிப் உர் ரஹ்மான் பந்துகளை புரிந்து கொள்வதே கடினமாக இருந்தது. ஆஃப் பிரேக் வீசுகிறார், கூக்ளி வீசுகிறார், கேரம் பந்து வீசுகிறார். புதிய பந்தில் வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    ஸ்காட்லாந்து நன்றாகத்தான் தொடங்கியது ஆனால் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து ஸ்காட்லாந்தை மீண்டும் இருளுக்குள் அழைத்துச் சென்றார் முஜிபுர் ரஹ்மான். ஆப்கானின் ஸ்பின் கதை அனைவரும் அறிந்ததே, ஆனால் ஆப்கான் பேட்டிங்தான் மற்ற அணிகளுக்கு கவலை அளிக்கக் கூடியது, இந்த டி20 வடிவமே அதிர்ச்சித்தோல்விகளுக்கான வடிவம் தான், இயன் சாப்பல் சரியாகத்தான் கூறுகிறார்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் என்பவர் ஒரு புவர் மேன்ஸ் கில்கிறிஸ்ட்தான். வெஸ்ட் இண்டீஸ் பாணியில் பட்டா பாக்கியம் படாவிட்டால் லேகியம், வந்தா மலை போனா.. என்று கூறுவார்களே அத்தகைய சுதந்திரப்புறக்கணிப்பு ரக பேட்டிங் ஆகும். இது கிளிக் ஆனால் யாருக்கும் இவர்கள் அஞ்சப்போவதில்லை என்று தெரிகிறது. முகமது ஷஜாத் இவர் ஆப்கானின் ‘பூம் பூம்’ வீரர். ரகமனுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், குறுகிய நீளமுள்ள பவுண்டரிகளை இவரைப்போன்று யாரும் பிக் செய்ய முடியாது.

    2012, 2016-ல் டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்குக் காரணமே அந்த அணியின் சிக்சர்கள் அடிக்கும் திறன் தான். அதே வகை சிக்ஸ் ஹிட்டிங், பவுண்டரி ஹிட்டிங் மாதிரியை தங்களுக்குள் சுவீகரித்துள்ளது ஆப்கான் அணி. நெட் ரன் ரேட்டில் நம்பர் 1 நிலையில் இருக்கும் ஆப்கான் அணி இந்தியாவை வீழ்த்துவது கடினம் என்றாலும் பாகிஸ்தானையோ, நியூசிலாந்தையோ அப்செட் செய்தால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும், ஆனால் இந்திய அணியும் எச்சரிக்கையுடன் ஆடுவது நல்லது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: