• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வெற்றிக் களிப்பில் ஷூவில் பானம் ஊற்றி அருந்திய ஆஸ்திரேலிய வீரர்கள்- வீடியோ

வெற்றிக் களிப்பில் ஷூவில் பானம் ஊற்றி அருந்திய ஆஸ்திரேலிய வீரர்கள்- வீடியோ

வெற்றிக் களிப்பில் ஆஸி. வீரர்கள்.

வெற்றிக் களிப்பில் ஆஸி. வீரர்கள்.

டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்துள்ளனர்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்துள்ளனர்.

    ஷூவில் குளிர் பானம் ஊற்றிக் குடித்த இந்த வீடியோ மற்றும் படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வார்னர் ஆட்டமிழந்தார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    ஷூவில் பானம் ஊற்றி அருந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் (வீடியோ)



    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது. நாக்-அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை எப்போதும் ஆஸ்திரேலியா அணி பந்தாடுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. உண்மையைக் கூற வேண்டுமெனில் கடந்த 40 ஆண்டுகளாக நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியதேயில்லை என்பது கடும் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்த உலகக்கோப்பை டி20 தொடருடன் சேர்த்து. இந்த ஆண்டு 627 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் 2021-ல் முகமது ரிஸ்வானுக்கு (1033) அடுத்த படியாக டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்துள்ளார். பாபர் ஆசம் 826 ரன்கள்.

    60 ரன்களை 4 ஓவர்களில் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா அணியில் அதிசாத்து வாங்கிய பவுலராக 2வது இடம் பெற்றார். 2018-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஆண்ட்ரூ டை 64 ரன்களை கொடுத்ததே சாத்துமுறையில் முதலிடம்.

    இந்நிலையில் ஷூவில் பானம் ஊற்றி அருந்திய வீடியோவை ஐசிசியே வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: