ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர்களை விட கலக்கிய ஆப்கானின் நஜிபுல்லா ஜத்ரன்

இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர்களை விட கலக்கிய ஆப்கானின் நஜிபுல்லா ஜத்ரன்

ஆப்கான் வீரர் நஜிபுல்லா ஜத்ரன்.

ஆப்கான் வீரர் நஜிபுல்லா ஜத்ரன்.

ஜத்ரன் நேற்று 6 பவுண்டரிகள் 3 பிரமாத சிக்சர்களை விளாசினார், அதுவும் டிம் சவுத்தியை நேராக அடித்த சிக்ஸ் வேறு ஒரு ரகத்தைச் சேர்ந்தது. மற்ற ஆப்கான் வீரர்கள் யாரும் 15 ரன்களைத் தாண்டாத பிட்சில் இவர் தனிரகமாக 48 பந்துகளில் 73 ரன்களை அதுவும் கடினமான நியூசிலாந்து பவுலிங் மற்றும் பீல்டிங்குக்கு எதிராக விளாசியது சாதாரண பேட்டிங் அல்ல.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாப், சூப்பர் ஸ்டார் இந்திய பேட்டர்கள் திக்கித் திணற நேற்று ஆப்கானிஸ்தானின் இடது கை அதிரடி பேட்டர் நஜிபுல்லா ஜத்ரன் கலக்கு கலக்கென்று கலக்கி விட்டார்.

  டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நஜிபுல்லா ஜத்ரன் 48 பந்துகளில் 73 ரன்கள் விளாசித்தள்ளினார். அதுவும் பெரிய மைதானமான அபுதாபியில், அதுவும் முதலில் பேட் செய்யும் அணிகள் தடுமாறுகின்றன என்று பலரும் தோல்வியடைந்த இந்திய பேட்டர்களுக்கு முட்டுக்கொடுப்பதற்காகக் கூறும்போது வேறு ஒரு களத்தில் ஆடுவது போல் ஆடினார் நஜிபுல்லா ஜத்ரன்.

  சேவாகும் இதைத்தான் இவரைப்பற்றி கூறுகிறார், “நான் நஜிபுல்லா ஜத்ரனுடன் டி10 லீகில் ஆடியிருக்கிறேன். அவரிடமிருந்து இந்த டி20 உலகக்கோப்பையில் நல்ல ஆட்டம் ஒன்றை எதிர்நோக்கினேன். வேகப்பந்து, ஸ்பின் இரண்டுக்கு எதிராகவும் நஜிபுல்லா ஜத்ரன் பிரில்லியண்ட் ஆக ஆடுகிறார். ஐபிஎல் ஒப்பந்தம் அவருக்காக காத்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்” என்றார்.

  ஜத்ரன் நேற்று 6 பவுண்டரிகள் 3 பிரமாத சிக்சர்களை விளாசினார், அதுவும் டிம் சவுத்தியை நேராக அடித்த சிக்ஸ் வேறு ஒரு ரகத்தைச் சேர்ந்தது. மற்ற ஆப்கான் வீரர்கள் யாரும் 15 ரன்களைத் தாண்டாத பிட்சில் இவர் தனிரகமாக 48 பந்துகளில் 73 ரன்களை அதுவும் கடினமான நியூசிலாந்து பவுலிங் மற்றும் பீல்டிங்குக்கு எதிராக விளாசியது சாதாரண பேட்டிங் அல்ல.

  சேவாக் மேலும் கூறும்போது, “நஜிபுல்லா ஜத்ரன் முற்றிலும் வேறு ஒரு பிட்சில் ஆடுவது போல் ஆடினார். மற்ற ஆப்கான் பேட்டர்களை ஒப்பிட்டால் இவர் வேறு ஒரு பிட்சில் ஆடியது போல்தான் ஆடினார். மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி ஸ்பின் பவுலிங்கை நன்றாக வெளுத்து வாங்கினார். நீஷமின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசினார் நஜிபுல்லா” என்றார் சேவாக்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: T20 World Cup