ஐபிஎல் போட்டிகளில் உரிமையாளர்கள் வீரர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது இதுதான் என்று ரிக்கி பாண்டிங் உண்மையை உடைத்துள்ளார்.
சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் 330 ரன் குவித்த இவரது 'ஸ்டிரைக் ரேட்' 183 ஆக உள்ளது. இதையடுத்து மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்றுள்ளார். இவரை இந்திய அணியில் தேர்வு செய்தேயாக வேண்டிய நிர்பந்தம் தேர்வுக்குழுவுக்கு ஏற்பட்டதன் காரணம் தினேஷ் கார்த்திக்கின் திடீர் எழுச்சிதான்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனௌமான ரிக்கி பாண்டிங் கூறும்போது, “ஐ.பி.எல் தொடரில் சிறந்த வீரராக இருப்பவர், இரண்டு அல்லது மூன்று போட்டி அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுத் தர வேண்டும் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கும். இது அவர்கள் கொடுத்த முதலீடுக்கு பலனாக எதிர்பார்க்கப்படும். ஆனால் தினேஷ் கார்த்திக் கடந்த ஐ.பி.எல். சீசனில் பெங்களூரு அணிக்காக கடைசி கட்டத்தில் பினிஷராக பிரமாதமாக ஆடினார். பல போட்டிகளில் வெற்றிகரமான 'ஃபினிஷிங்' கொடுத்தார்.
பெங்களூரு அணியில் மற்ற வீரர்கள் அனைவரையும் விட சிறப்பாக செயல்பட்டார். தனது பேட்டிங் திறனை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். வரும் உலக கோப்பை 'டி-20' தொடரில் இந்திய அணியில் கார்த்திக் 5 அல்லது 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும். ஏனெனில் அணிக்கு சிறந்த 'பினிஷராக' இருப்பார் கார்த்திக். ஒருவேளை அவர் அணியில் இடம் பெறவில்லை என்றால் அது ஆச்சரியமாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dinesh Karthik, IPL, T20 World Cup