• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WC warm-up:கோலி இல்லை-ஹாட்ரிக் வாய்ப்பில் அஸ்வின்- வார்னர், மார்ஷ் அவுட்- ஆஸ்திரேலியா 11/3

T20 WC warm-up:கோலி இல்லை-ஹாட்ரிக் வாய்ப்பில் அஸ்வின்- வார்னர், மார்ஷ் அவுட்- ஆஸ்திரேலியா 11/3

அஸ்வின்.

அஸ்வின்.

துபாயில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி வார்ம்-அப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன, இதில் முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி வார்னர், மார்ஷ் விக்கெட்டை அஸ்வினிடம் இழந்தது.

  • Share this:
    வார்னர், பிஞ்ச் தொடக்க வீரர்களாக இறங்கினர், முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 3 ரன்களைத்தான் கொடுத்தார். 2வது ஓவர் அஸ்வின் வந்தார். 4 பந்துகளில் 3 சிங்கிள்கள் கொடுத்தார். 5வது பந்தை வார்னர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். அடுத்த பந்தே மிட்செல் மார்ஷுக்கு அபாரமான ஒரு பந்தை வீச டர்ன் ஆகாத பந்து நேராகச் சென்றதில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் ரோகித் கையில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

    இந்த இரண்டு விக்கெட்டுகளும் 2வது ஓவரின் 5, 6ம் பந்துகளில் விழுந்ததால் ஹாட்ரிக் வாய்ப்பு அஸ்வினின் அடுத்த ஓவருக்குச் சென்றது, ஆனால் ஜடேஜாவிடம் கொடுக்க அவர் வந்தவுடன் பிஞ்ச் விக்கெட்டை நேர் பந்தில் எல்.பியில் வீழ்த்தினார். அஸ்வின் ஹாட்ரிக் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    ஆக ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களையே எடுத்துள்ளது. ஸ்டிவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் களத்தில் இருக்கின்றனர். வார்னர் பாவம் டக் பயணத்திலிருந்து வெளியே வந்து கடைசியில் ஒரு ரன்னில் அவுட் ஆகியுள்ளார், சில சமயங்களில் அக்ரசிவ் அணுகுமுறை லபிக்காது, பார்ம் அவுட்டிலிருந்து எப்படி பார்முக்கு வருவது என்பதை சச்சின், லாரா, பாண்டிங்கிடமிருந்து இவர் கற்றுக்கொள்வது நலம்.

    இன்றைய இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டன், கோலி இல்லை, ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அஸ்வின், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாகர்.

    பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு. அஸ்வின் 1 ஓவர் 3 ரன் 2 விக்கெட். ஜடேஜா 1 ஓவர் 3 ரன் ஒரு விக்கெட். ஸ்டீவ் ஸ்மித் 2, மேக்ஸ்வெல் 1 ரன் ஆடிவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: