• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India's Semi Final chances| அரையிறுதி சாத்தியமா? இந்திய அணி 2 போட்டிகளிலும் தலா 180 ரன்கள் அடித்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்

India's Semi Final chances| அரையிறுதி சாத்தியமா? இந்திய அணி 2 போட்டிகளிலும் தலா 180 ரன்கள் அடித்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்

விரக்தியில் விராட்.

விரக்தியில் விராட்.

இந்திய அணி இன்று நடைபெறும் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான ஆட்டம் இரண்டிலும் முறையே 180 ரன்கள் எடுக்க வேண்டும் இரண்டு எதிரணிகளையும் 60 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்ட வேண்டும். இப்படிச் செய்தால் நெட் ரன் ரேட் 1.303 என்ரு இந்தியா சார்பில் உயரும்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பையில் இன்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்தியா வெல்லும் என்றாலும் பெரிய மார்ஜினில் வென்றால்தான் அரையிறுதிக்கான ஒரு 5% வாய்ப்பையாவது தக்க வைக்க முடியும்.

    ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்துவதற்கு முன்பாக இந்திய நெட் ரன் ரேட் மைனஸ் 1.609, ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பிறகு 0.073, ஆப்கானிஸ்தானின் ரன் விகிதம் இந்தியாவுடனான தோல்விக்கு முன்பாக 3.097 ஆக இருந்தது இப்போது 1.481 ஆக உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இன்று நடைபெறும் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான ஆட்டம் இரண்டிலும் முறையே 180 ரன்கள் எடுக்க வேண்டும் இரண்டு எதிரணிகளையும் 60 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்ட வேண்டும். இப்படிச் செய்தால் நெட் ரன் ரேட் 1.303 என்ரு இந்தியா சார்பில் உயரும்.

    ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்து குறைந்தது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். நியூசிலாந்து என்ன செய்ய வேண்டுமெனி நமீபியாவை வீழ்த்தி தன் நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்தினால் போதுமானது. அதாவது அடுத்து ஆப்கான் போட்டிக்கு முன்பாக ரன் ரேட்டை நியூசிலாந்து அதிகரிக்க நமீபியா போட்டியில் வாய்ப்புள்ளது.

    இந்திய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி, நியூசிலாந்து தன் கடைசி 2 போட்டிகளில் ஒன்றைத் தோற்றால் இந்தியா-நமீபியா போட்டியில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பைப்பெறுவதற்கான அனைத்து விவரங்களும் தெரியவரும், அப்படி இந்திய அணிக்குச் சாதகமாகத்தான் ஷெட்யூல் அமைக்கப்பட்டுள்ளது. பாவம் வர்த்தக உலகம் என்ன கண்டது, இந்திய அணி முதல் 2 போட்டிகளில் திண்டாடி இப்படி மற்ற அணிகளை நம்பியிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா என்ன? இந்தியா வெளியேறி விட்டால் பிசிசிஐ கவலை என்னவெனில் வர்த்தக உலகத்துக்கு நஷ்டம் ஏற்படுமே என்றுதான். அதற்காகத்தான் இந்த பிரிவில் கடைசி லீக் போட்டியை இந்தியா ஆடுமாறு சவுகரியம் செய்து கொடுத்துள்ளது ஐசிசி.

    ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் வின் என்று ஞானஒளி சிவாஜி வசனத்தை நாம் மாற்றி இந்திய அணியின் நிலையை வர்ணிக்கலாம்.

    நியூசிலாந்து நிலை என்ன?

    இப்போதைக்கு 4 புள்ளிகளில் உள்ள நியூசிலாந்து நெட் ரன் ரேட் என்ற பேச்செல்லாம் இல்லாமல் நமீபியா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி விட்டால் இந்தியா மூட்டைக் கட்ட வேண்டியதுதான். ஆப்கானிஸ்தானும் தான். அல்லது வர்த்தக உலகம் விரும்புவது போல் இந்திய அணிதான் அரையிறுதிக்கு வரவேண்டும் என்று இருந்தால் நியூசிலாந்து அணி ஏதாவது ஒரு போட்டியை தோற்க வேண்டும்.

    ஸ்காட்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து குறைந்த மார்ஜினில் வென்றதைப் பார்த்தால் நமக்கே சந்தேகம் வருகிறது. 0.765 என்று இருந்த நியூசிலாந்து ரன் ரேட் இந்த வெற்றிக்குப் பிறகு 0.816 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது. நமீபியாவுக்கு எதிராக நியூசிலாந்து முதலில் பேட் செய்து 180 ரன்கள் எடுத்து குறைந்தது 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் நியூசிலாந்தின் நிகர ரன் விகிதம் 1.391 ஆக இருக்கும்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 150 ரன்கள் இலக்கை சப்போஸ் நியூசிலாந்து விரட்டும்போது ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் நியூசிலாந்தின் நிகர ரன் விகிதம் 1.094 ஆகவே இருக்கும், இதனை இந்தியா ஸ்காட்லாந்து, நமீபியாவுக்கு எதிரான பெரிய வெற்றிகள் மூலம் எளிதில் கடந்து விடும். இன்று ஷார்ஜாவில் நமீபியாவுடன் நியூசிலாந்து மோதுகிறது ஞாயிறன்று அபுதாபியில் ஆப்கானுடன் மோதுகிறது.

    ஆப்கானிஸ்தான் தற்போது 4 புள்ளிகள் மற்றும் 1.481 நிகர ரன் விகிதத்தில் உள்ளது, நியூசிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் வெற்றி பெற வேண்டும், அதாவது இந்தியா தன் இரண்டு போட்டிகளிலும் தலா 180 ரன்களெடுத்து இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால் ஆப்கானிஸ்தான் அணி 150 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை 138 ரன்களுக்குள் சுருட்டினால் இந்தியாவின் நெட் ரன் ரேட்டை விட அதிகமாகி அரையிறுதியில் நுழையும்.

    நியூசிலாந்து மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுக்குச் சென்று விட்டால் எல்லாம் மூட்டையைக் கட்ட வேண்டியதுதான் என்பதுதான் எதார்த்த நிலை இருந்தாலும் இந்திய ரசிக மனங்களின் நப்பாசையை நாமும் பிரதிநிதித்துவம் செய்வோமே என்பதற்காகத்தான் இந்தக் கணக்கீடுகள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: