ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாபர் ஆசம் அபார ஆட்டம்! நியூசிலாந்துக்கு எதிரான டி20-யில் பாகிஸ்தான் வெற்றி

பாபர் ஆசம் அபார ஆட்டம்! நியூசிலாந்துக்கு எதிரான டி20-யில் பாகிஸ்தான் வெற்றி

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

கேப்டன் பாபர் ஆசம் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 53 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

  நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள ஹேக்ளி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

  இந்திய நேரப்படி 11:40 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பின் ஆலென்13 ரன்களும், விக்கெட் கீப்பர் கான்வாய் 36 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 31 ரன்களும்,  கிளென் பிலிப்ஸ் 18 ரன்களும், சாப்மேன் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது.

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சஹர் விலகல்… அணியில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்

  இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகம்மது ரிஸ்வான் சவுத்தி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

  மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் பாபர் ஆசம் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 53 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். சதாப் கான் 34, முஹம்மது நவாஸ் 16, ஹைதர்அலி 10 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 18.2 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 79 ரன்கள் சேர்த்த கேப்டன் பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket