ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ‘யார்க்கர்’ நடராஜன் சந்தேகம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ‘யார்க்கர்’ நடராஜன் சந்தேகம்

நடராஜன்.

நடராஜன்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் புனர்சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரது காயம் குறித்தும் எத்தனை நாட்கள் அவரால் ஆட முடியாது போன்ற விவரங்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதள செய்தி கூறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மார்ச் 12ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் முதல் டி20 போட்டிக்கு இந்திய அணியில் டி.நடராஜன் எனும் ‘யார்க்கர்’ நடராஜன் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் புனர்சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரது காயம் குறித்தும் எத்தனை நாட்கள் அவரால் ஆட முடியாது போன்ற விவரங்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதள செய்தி கூறுகிறது.

19 வீரர்கள் கொண்ட இந்திய டி20 அணியில் நடராஜன் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து யூ-டர்ன் அடித்தது. ஆஸ்திரேலியா தொடருக்கு நெட் பவுலராகப் போய் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுவும் பிரிஸ்பனில் லபுஷேன் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் இந்திய அணியின் வரலாற்று வெற்றியில் பெரிய பங்களிப்பு செய்தது.

ஒரே தொடரில் 3 சர்வதேச வடிவங்களிலும் இந்திய அணிக்காக ஆடிய முதல் வீரர் ஆனார் நடராஜன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் 6 விக்கெட்டுகளை பிரமாத சிக்கன விகிதமான 6.91-ல் கைப்பற்றினார். டி20 கோப்பையை இவரைத் தூக்குமாறு விராட் கோலி கூறியது தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாகவும், கண்களில் கண்ணீரை வரவழைத்ததாகவும் பிற்பாடு தெரிவித்தார்.

இந்தியா திரும்பியவுடன் சாரட் வண்டி, செண்டை மேளதாளம் முழங்க அவரது சொந்த ஊரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் நடராஜன் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. நடராஜன் இல்லை என்றால் அது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்குமே பெரிய ஏமாற்றம்தான்.

First published:

Tags: Cricketer natarajan, India Vs England, T natarajan