முகப்பு /செய்தி /விளையாட்டு / வில்லியம்சன் ஆப்செண்ட்.. பக்கா ப்ளானில் நியூசிலாந்து.. தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

வில்லியம்சன் ஆப்செண்ட்.. பக்கா ப்ளானில் நியூசிலாந்து.. தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா vs நியூசிலாந்து

இந்தியா vs நியூசிலாந்து

IND vs NZ | சொந்த மண்ணில் தொடரை இழக்காமல், சமன் செய்ய நியூசிலாந்து வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது

  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaNewzealand Newzealand

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே வெலிங்டனில் நடைபெற இருந்த முதல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மவுன்ட் மவுன்கனூயில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில், ஹர்திக் பாண்ட்யா தலைமையில், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில், சொந்த மண்ணில் தொடரை இழக்காமல், சமன் செய்ய நியூசிலாந்து வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால் பல வியூகங்களை வகுத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

என்னப்பா இவரை விட்டுட்டீங்க..? சிஎஸ்கே அணியை வச்சு செய்யும் ரசிகர்கள்! 

இதனிடையே, முழங்கை காயம் தொடர்பாக கேன் வில்லியம்சன் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறார். இதனால், இப்போட்டியில் அவர் களமிறங்கமாட்டார். அவருக்குப் பதில், நியூசிலாந்து அணியை டிம் சவுத்தி வழி நடத்தவுள்ளார்.

First published:

Tags: Hardik Pandya, Ind vs NZ, T20