ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 கிரிக்கெட் உலக கோப்பை : ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்த விராட் கோலி

டி20 கிரிக்கெட் உலக கோப்பை : ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்த விராட் கோலி

 விராட் கோலி

விராட் கோலி

T20 Cricket World Cup : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 12 சுற்றில் 53 பந்தில் 82 ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்களையும் குவித்தார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளில்  அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மஹிலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி  சாதனை படைத்துள்ளார்.

  கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என்று அழைக்கப்படுபவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச போட்டிகளில்  சதங்களையும், சாதனைகளையும் குவித்து வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் ஃபார்மில் இல்லாமல் இருந்தார். இதற்காக பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தார்.

  இந்நிலையில், ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் விளாசி,  நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். ஆசிய கோப்பையில் அசத்திய விராட் கோலி, அவரது சிறப்பான ஃபார்மை டி20 உலக கோப்பையிலும் தொடர்ந்து வருகிறார்.

  இதையும் படிங்க : தென் ஆப்ரிக்கா டி20 லீக்: இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பெற்ற Viacom18

  பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 12 சுற்றில் 53 பந்தில் 82 ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்களையும் குவித்தார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்தார்.

  அடிலெய்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் எடுத்தபோது, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். இதுவரை இந்த சாதனையை இலங்கையின் மஹிலா ஜெயவர்தனே வைத்திருந்தார். 31 இன்னிங்சில் விளையாடி ஆயிரத்து 17 ரன்கள் குவித்திருந்த ஜெயவர்தனேவின் சாதனையை வெறும் 23 இன்னிங்சில்  கடந்துள்ளார் இந்தியாவின் ரன் மெஷின் கோலி.

  இதையும் படிங்க : ரோட்டோரக் கடையில் சூடா ஒரு டீ.. ரசிகர்களுடன் செல்ஃபி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்!

  மேலும் இந்த தொடரில் 220 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதிக ரன்கள் என்ற சாதனை பட்டியலில் 965 ரன்களுடன் கிறிஸ் கெய்ல்  3-ஆம் இடத்தில் உள்ளார். 921 ரன்களுடன் ரோஹித் சர்மா 4-ஆம் இடத்தில் உள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: T20 World Cup, Virat Kohli