ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கச்சிதமாக அடித்த ரஷித் கான்! (வீடியோ)

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கச்சிதமாக அடித்த ரஷித் கான்! (வீடியோ)

பந்தை சிக்சருக்கு பறக்கவிடும் ரஷித் கான்.

பந்தை சிக்சருக்கு பறக்கவிடும் ரஷித் கான்.

#RashidKhan Hit Perfect Dhoni's 'Helicopter Shot' | 7 பந்துகளில் தலா 2 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் உதவியுடன் ரஷித் கான் 21 ரன்கள் விளாசினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி-10 லீக் போட்டியில் ‘தல’ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கச்சிதமாக அடித்த ரஷித் கான், அந்த வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ’தல’ தோனி, ‘ஹெலிகாப்டர் ஷாட்’ என்ற சிக்சர் அடிக்கும் முறையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் 20 வயதேயான நட்சத்திர வீரர் ரஷித் கான், கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.

சுழற்பந்து மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சாதித்து வரும் ரஷித் கான், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கனக் கச்சிதமாக அடித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டி போன்று, 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் டி-10 லீக் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். ஷார்ஜாவில் நடந்த பாக்டூன்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ரஷித் கான், 7 பந்துகளில் தலா 2 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் உதவியுடன் 21 ரன்கள் விளாசினார்.

குறைந்த ஓவர்கள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் எத்தனையோ ஷாட்களை அடித்தாலும், ‘தல’ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு மவுசு குறையாமல் உள்ளது.

மேலும் பார்க்க...

First published:

Tags: Rashid Khan, T10 League