Home » News » Sports » CRICKET T NATARAJAN TO REPLACE UMESH YADAV IN INDIA TEST SQUAD MUT

இந்திய டெஸ்ட் அணியில் ‘யார்க்கர்’நடராஜன் சேர்ப்பு

அணியில் டி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 வீரர்களில் இவரா ஷர்துல் தாக்கூரா என்ற கேள்வியில் முதல் தர கிரிக்கெட்டில் அனுபவம் பெற்ற ஷர்துல் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் ‘யார்க்கர்’நடராஜன் சேர்ப்பு
இந்திய டெஸ்ட் அணியில் யார்க்கர் நடராஜன்.
  • Share this:
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இடது காலில் காயம்பட்ட உமேஷ் யாதவ் ஆஸி. தொடரிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக தமிழக வீரர் டி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அனைத்திந்திய மூத்த வீரர்கள் தேர்வுக்குழு டி.நடராஜனை யாதவுக்குப் பதிலாகத் தேர்வு செய்தது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக காயமடைந்த மொகமட் ஷமிக்குப் பதிலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

ஷமியும் உமேஷ் யாதவ்வும் பெங்களூருவில் உள்ள் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு புனர் மேம்பாட்டுக்காக வரும் நிலையில் நடராஜன், ஷர்துல் தாக்கூர் சிட்னிக்குச் செல்கின்றனர்.


மெல்போர்னில் உள்ள இந்திய அணியுடன் ரோஹித் சர்மா தன் தனிமைப்படுத்தல் காலக்கட்டம் முடிந்து இணைந்துள்ளார்.

அணியில் டி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 வீரர்களில் இவரா ஷர்துல் தாக்கூரா என்ற கேள்வியில் முதல் தர கிரிக்கெட்டில் அனுபவம் பெற்ற ஷர்துல் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

ஒருவேளை கடைசி நேர முடிவாக ரவி சாஸ்திரியும் ரஹானேவும் டி.நடராஜனுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று முடிவெடுத்தால் நடராஜனுக்கு அடிக்கும் லக்கி பிரைஸ்.ஷர்துல் தாக்கூரை விட டி.நடராஜனின் இடது கை வேகப்பந்து வீச்சு இன்னொரு வெரைட்டியை பந்து வீச்சில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னி டெஸ்ட் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது.
First published: January 1, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories