புதுப்பொலிவுடன் சிட்னியை வலம் வரும் தங்கராசு நடராஜன்..!
T Natarajan | முதல் டி20 போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்த நடராஜன், இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றி மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார்.

சிட்னியில் நடராஜன்
- News18 Tamil
- Last Updated: December 11, 2020, 1:01 PM IST
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வீரர் தங்கராசு நடராஜன் சிட்னியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் துல்லியமான யார்க்கர் மற்றும் தரமான பந்துவீச்சு காரணமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 16 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனைதொடர்ந்து டி20 போட்டிக்கான இந்திய அணியில் களம் கண்ட நடராஜன், தனது அசாத்திய திறமையாலும், துல்லியமான யார்க்கர் பந்துவீச்சாலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்த நடராஜன், இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றி மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார். இறுதியாக இந்திய அணி டி20 தொடரை வென்று வரலாற்றுச்சாதனை நிகழ்த்தியது. தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா இவ்விருது நடராஜனுக்குத்தான் பொருத்தமானது என கூறி, கோப்பையை நடராஜனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் சாம்பியன் கோப்பையை வாங்கிய கேப்டன் கோலி, நடராஜன் கையில் கொடுத்து அழகுபார்த்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிான டெஸ்ட் தொடரில் நடராஜன் அணியில் இல்லையென்றாலும் காயம் காரணமாக விலகும் வீரர்களுக்கு பதிலாக மாற்றுவீரராக நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனிடையே சிட்னியில் உற்சாகமாக தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடராஜனினின் புகைப்டங்களை பார்த்த ரசிகர்கள் ரொம்ப ஸைனிங்கா மாறிவிட்டீர்கள் என்று பதிலளித்துள்ளனர். இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் துல்லியமான யார்க்கர் மற்றும் தரமான பந்துவீச்சு காரணமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 16 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்த நடராஜன், இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றி மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார். இறுதியாக இந்திய அணி டி20 தொடரை வென்று வரலாற்றுச்சாதனை நிகழ்த்தியது. தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா இவ்விருது நடராஜனுக்குத்தான் பொருத்தமானது என கூறி, கோப்பையை நடராஜனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் சாம்பியன் கோப்பையை வாங்கிய கேப்டன் கோலி, நடராஜன் கையில் கொடுத்து அழகுபார்த்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிான டெஸ்ட் தொடரில் நடராஜன் அணியில் இல்லையென்றாலும் காயம் காரணமாக விலகும் வீரர்களுக்கு பதிலாக மாற்றுவீரராக நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனிடையே சிட்னியில் உற்சாகமாக தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"Sydney"fied 🇦🇺 pic.twitter.com/qw4zQcfyMj
— Natarajan (@Natarajan_91) December 10, 2020