உங்க வீட்டுக்கு ஒருநாள் வரோம், சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: ‘யார்க்கர்’ நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்

உங்க வீட்டுக்கு ஒருநாள் வரோம், சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: ‘யார்க்கர்’ நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்

மொட்டை போட்டுக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன். | படம்: ட்விட்டர்.

"சேலத்துல வாழப்பாடி பக்கம்தான் இருந்தேன், சரி உங்களை வந்து பார்க்கலாம்னுதான் இருந்தேன். நீங்க ஊர்ல இல்லை. நாங்க ரெண்டுபேரும் உங்களை வந்து பார்க்கலாம்னு இருந்தோம்."

 • Share this:
  ஆஸ்திரேலியாவுக்கு நெட்பவுலராகச் சென்று ஒருநாள், டி20, டெஸ்ட் என்று மூன்று சர்வதேச இந்திய அணிகளிலும் ஆடி, வெற்றிகரமாகப் பந்து வீசிய தமிழகத்தைச் சேர்ந்த வளரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுடன் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் வீடியோகாலில் பேசி வாழ்த்துத் தெரிவித்தனர்.

  நடராஜன் பழனிக்குச் சென்று முடியிறக்கி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக பிப்.5ம் தேதி சென்னையில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் இல்லை, முதல் 2 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  கடினமான ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு எந்த வீரருக்கும் ஓய்வு தேவைப்படுவது இயற்கையே.

  இந்நிலையில் நடராஜனுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாரும், ராதிகாவும் வீடியோகாலில் உரையாடினர்.

  அதில், ‘நீங்க ஊரில் இல்லை பழனிக்குப் போயிருக்கிறதா சூரி சொன்னார். நிறைய இடத்துல உங்களப் பத்திதான் பேசறேன். ஏன் பேசறேன்னா, நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாக்கூட இன்னொருத்தர் வரதுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர் நடராஜன்னு சொன்னேன்.

  பொதுவா பொலிட்டிகலா சொல்வேன், முதலமைச்சரா யார் வேணா ஆகலாங்க, திறமையிருந்தா வரலாம் அதே மாதிரிதான் நடராஜன் கிட்ட திறமை இருந்தது வந்தாரு. திறமை இருக்கறவங்கள்ளாம் வரலாம் அப்டீன்னு உங்க பேரை குறிப்பிடுவேன்.

  சேலத்துல வாழப்பாடி பக்கம்தான் இருந்தேன், சரி உங்களை வந்து பார்க்கலாம்னுதான் இருந்தேன். நீங்க ஊர்ல இல்லை. நாங்க ரெண்டுபேரும் உங்களை வந்து பார்க்கலாம்னு இருந்தோம்.

  இங்கிலாந்தோட ஃபர்ஸ்ட் 2 டெஸ்ட்டுக்கு நீங்க இல்லை இல்லையா? ஓகே நல்ல ஃபியூச்சர் இருக்கு. விஷ் யு ஆல் த பெஸ்ட் நடராஜ். நான் வரேன், வீட்டுக்கு ஒருநாள் வரோம். சென்னைக்கு வந்தா வாங்க.’ என்று நடராஜனுடன் உரையாடினார் சரத்குமார்.
  Published by:Muthukumar
  First published: